ஐப்பசி மாத விஷேசங்கள்! தீபாவளி கந்தசஷ்டியைத் தவிர விரதங்கள் பண்டிகைகள்! துலா மாத சிறப்பு...

Aipassi Month Festivals & Signficance : புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்றால், ஐப்பசி மாதம் சிவபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும் உகந்த மாதமாகும். இன்று முதல் ஒரு மாதத்திற்கு ஐப்பசி மாதத்தில் வரும் பண்டிகைகள் விரதங்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 17, 2024, 11:21 AM IST
  • சிவபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும் உகந்த ஐப்பசி மாதம்
  • ஐப்பசி மாதத்தில் வரும் பண்டிகைகள் விரதங்கள்
  • துலா மாத முக்கியத்துவம்
ஐப்பசி மாத விஷேசங்கள்! தீபாவளி கந்தசஷ்டியைத் தவிர விரதங்கள் பண்டிகைகள்! துலா மாத சிறப்பு... title=

ஐப்பசி மாதம் இன்று தொடங்கியது. தமிழ் மாதங்களில் ஐப்பசிக்கு முக்கியத்துவம் அதிகம். அதற்கு காரணம், தீபாவளி, கந்த சஷ்டி போன்ற பண்டிகைகள் மட்டுமல்ல. ஐப்பசி மாதத்தின் சிறப்புகளையும், இந்த மாதம் வரும் முக்கிய விசேஷங்களையும் தெரிந்துக் கொள்வோம். அக்டோபர் மாதத்திற்கான பவுர்ணமி இன்று அக்டோபர் 17ம் தேதி வருகிறது. வியாழக்கிழமையில் வருவதால் இன்றைய முழுநிலவு நாளுக்கு குபேர பவுர்ணமி என்று பெயரும் உண்டு.

துலா மாதம்

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்றும் ஐப்பசி மாதம் என்றும் சொல்வார்கள். சிவனுக்கு அன்னாபிஷேகம் ஐப்பசியில் விசேஷம் என்றால், தீபாவளி, கந்தசஷ்டி உள்ளிட்ட பண்டிகைகள் மிகவ்வும் முக்கியமானவை.  

காவிரியில் புனித நீராடல்

ஐப்பசி மாதத்தில் நதிகளில் நீராடுவது மகா புண்ணியம் என்பது இந்து மத நம்பிக்கை ஆகும். ஐப்பசி மாதம் முழுவதும் உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும், கங்கை காவிரி போன்ற புனித நதிகளில் கலப்பதாக ஐதீகம், அதிலும் ஐப்பசி அமாவாசை நாளான தீபாவளி நாளன்று, எங்கிருக்கும் நீரானாலும், அதில் கங்கை அன்னை இருப்பதாக நம்புவதால் தான், ‘கங்கா ஸ்நானம்’ என்று தீபாவளி நாள் குளியல் பெயர் பெறுகிறது.

காவிரி நீராடல்

ஐப்பசி மாதத்தில் காவிரியில் புனித நீராடுவதால் புண்ணியம் அதிகரிக்கும். ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்று அழைகிறோம். இந்த மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராட வேண்டும். ஐப்பசியில் துலா ஸ்நானம் செய்வதால் நரம்பு தளர்ச்சி பிரச்சினைகள் நீங்கும். நோய்கள் அகலும்.

தமிழ் மாதங்களில் சித்திரை தொடங்கி 7வது மாதமாக வரும் ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பார். சித்திரை மாதத்தில் உச்சமடையும் சூரிய பகவான், ஐப்பசி மாதத்தில் நீச்சமடைகிறார். இதனால் இந்த மாதத்தில் சூரிய வெப்பத்தின் தாக்கம் பெருமளவு குறைந்து வெப்பநிலை தணியும்.  

மேலும் படிக்க | இந்த ரெண்டு கிரகங்களும் சேர்ந்தால் எப்போதுமே யோகம் தான்! புதனும் சூரியனும் இணையும் புதாதித்ய ராஜயோகம்!

சைவத்தில் ஐப்பசி மாதம்
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்றால், ஐப்பசி மாதம் சிவபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும் உகந்த மாதமாகும். முருகப்பெருமான்,  சூரபத்மனை சம்ஹாரம் செய்து வெற்றி பெற்ற கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதும் ஐப்பசியில் தான்.

அன்னாபிஷேகம்
ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவாலயங்களில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகத்தை தரிசித்தால் கோடி புண்ணியம் கிட்டும். முரன் முதலான அசுரர்களை அழித்ததால் மகாவிஷ்ணுவை பற்றிய வீரஹத்தி தோஷதைப் போக்க, காவேரியில் ஐப்பசி மாதம் நாக சதுர்த்தியன்று விஷ்ணு துலா ஸ்நானம் செய்து, தோஷம் நீங்கப் பெற்றார் என்பதும் புராணங்கள் சொல்லும் உண்மை.

ஐப்பசி 2024 விசேஷங்களின் பட்டியல் 
அக்டோபர் 31 ஐப்பசி 14: தீபாவளிப் பண்டிகை
நவம்பர் 01 ஐப்பசி 15: கேதார கெளரி விரதம்
நவம்பர் 02 ஐப்பசி 16: கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்
நவம்பர் 07 ஐப்பசி 21 : கந்தசஷ்டி சூரசம்ஹாரம்
நவம்பர் 15 ஐப்பசி 29: மஹா அன்னாபிஷேகம் 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | வக்ரத்தில் இருந்து நேராகும் சனி பகவான் அள்ளிக் கொடுப்பார்! இந்த ராசிகள் காட்டில் பண மழை!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News