Blue Gemstone & Lord Saturn: சனியின் கோபப்பார்வையில் இருந்தும், சனி தோஷத்தில் இருந்தும் நிவாரணம் பெற நீலமணி ரத்தினம் என்னும் நீலக்கல்லை அணிவது உதவும். ப்ளூ சஃபையர் என்னும் நீலக்கல்லை அணிவதன் மூலம், ஜாதகத்தில் ஏற்படும் சனி தோஷத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்றும், சனி தேவரின் எதிர்மறை தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கும் என்றும் நம்பப்படுகிறது. வாழ்க்கையில் சந்தித்து வரும் துன்பங்கள் மறையும் செல்வ செழிப்பு குறையாமல் இருக்கும்.
சனி தேவரின் அருள் பரிபூரணமாக கிடைக்க உதவும் நீலக்கல்
வைரத்திற்குப் பிறகு நீலக்கல் தான் திடமான கல் ஆகும். இதன் மூலம், வாழ்க்கையின் அனைத்து துக்கங்கள் மற்றும் தொல்லைகளிலிருந்தும் ஒருவருக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும், சனி தேவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. நீலக்கல் அணிவதன் விதிகள் மற்றும் பலன்களை தெரிந்து கொள்வோம்...
நீலக்கல்லை அணியும் முறை
ஜோதிடர் வல்லுநர் ஆலோசனையின்படி இந்த ரத்தினத்தை சனிக்கிழமை அன்று அணிய வேண்டும். சனிக்கிழமையன்று சனிபகவானை பக்தியுடன் வழிபட்டு, ஓம் ஷாம் ஷனைச்சராய நம என்ற சனிதேவரின் விதை மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.அதன் பிறகு, நீலக்கல் ரத்தின மோதிரத்தை வலது கையின் நடுவிரலில் அணிய வேண்டும்.
பல வகையில் நன்மை பயக்கும் நீலக்கல்
1. நீலக் கல் அணிவது நிதி சிக்கல்களில் இருந்து விடுபட உதவும். கடன் தொல்லை தீரும். மேலும், பல வகையில் நன்மை பயக்கும். நீலக்கல் அணிவதால், வேலை, வணிகம் தொடர்பான சிக்கல்களும் நீங்கும் என்று நம்பப்படுகிறது. நீல ரத்தினம் வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கும் உதவும். இதனால் வேலையில், தொழிலில் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
2. நீலக்கல் ரத்தினத்தை அணிவதன் மூலம் சனியின் கோபப்பார்வை, ஏழரை நாட்டு சனி , சனி திசை, சனி தோஷம் ஆகியவற்றால் ஏற்படும் அசுப பலன்கள் குறையும் என்பது நம்பிக்கை.
3. நீலக்கல் மிகவும் பாதுகாப்பை வழங்கும் ரத்தினம் என கூறப்படுகிறது. திருட்டு, விபத்து, இயற்கை பேரழிவு போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதோடு, எதிரிகள், தீய கண், பொறாமை பார்வை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பையும் வழங்குகிறது. அதாவது நீலக்கல் ஒரு கேடயமாக மாறி, அணிந்தவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
4. நீலக்கல் உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். வயிறு பிரச்சனைகளுக்குத் தீர்வை தருகிறது. மேலும் மன அழுத்தம், பதற்றம், சோர்வு போன்றவற்றை விரட்டி அடிக்க உதவுகிறது. நரம்பு தொடர்பான கோளாறுகள், மூச்சுக்குழாய் அழற்சி, பக்கவாதம், கீல்வாதம், முடக்குவாதம் போன்ற நோய்களிலிருந்தும் மீண்டு ஆரோக்கியமாக வாழ நீலக்கல் உதவுகிறது.
நீலக்கல் அணியும் போது மனதில் கொள்ள வேண்டியவை
நீலக்கல் அணியும் போது மிகவும் கவனம் தேவை. இதனை நிபுணரின் ஆலோசனைப்படி சரியான நேரத்தில் அணியவேண்டும் அதுவுமில்லாமல் 100% இயற்கையானது என சான்றளிக்கப்பட்டதா என பார்த்து அணியவேண்டும். நீலக்கல்லை வெள்ளி அல்லது பிளாட்டினம் கொண்டு செய்யப்பட்ட மோதிரத்தில், அல்லது செயினில் பதித்து அணிவததால் மட்டுமே சாதகமான பலன்களை பெற முடியும். தங்க மோதிரம் அல்லது செயினில் பதித்து அணிந்தால் எதிர்மறை பாதிப்புகளைத் தரும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | ராணுவ வீரர்களின் ஜாதகத்தில் செவ்வாய் எங்கே இருப்பார்? வீரத்தை தரும் அங்காரகர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ