சரஸ்வதி பூஜை 2023, வசந்த பஞ்சமி 2023: பஞ்சமி என்பது மாதந்தோறும் வரும் வளர்பிறை ஐந்தாம் நாளாகவும், தேய்பிறை ஐந்தாம் நாளாகவும் வரும் திதி ஆகும். இப்பஞ்சமி நாட்களில் மிக விசேஷமானது கருட பஞ்சமி மற்றும் வசந்த பஞ்சமி ஆகும். குளிர்காலம் முடிந்து அடுத்து வரவிருக்கும் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுவதால், வசந்த பஞ்சமி என்று இந்நாள் அழைக்கப்படுகிறது. வசந்த பஞ்சமி வட இந்தியாவில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த வசந்த பஞ்சமி தினத்தை ரிஷி பஞ்சமி என்றும் அழைப்பார்கள். மேலும் வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி எனப் பலபெயர்களால் அழைக்கப்படும் சரஸ்வதி தேவி தோன்றிய நாளாக வசந்த பஞ்சமி கருதப்படுகிறது.
வசந்த பஞ்சமி எப்போது?
ஜனவரி மாதம் 25ஆம் தேதி 12:34 மதியம் முதல் ஜனவரி 26ஆம் தேதி 12:39 pm வரை சரஸ்வதிக்கு பஞ்சமி வழிபாடு செய்யலாம்.
மேலும் படிக்க | மீனத்தில் மாளவ்ய ராஜயோகம்! ‘இந்த’ ராசிகளுக்கு சுக்கிர திசை தான்!
வசந்த பஞ்சமியில் சரஸ்வதி பூஜை எப்படி செய்வது
சரஸ்வதி பூஜை செய்ய அதிகாலையில் எழுந்து புண்ணிய ஸ்தலங்களில் நீராட வேண்டும். அதன் பிறகு சரஸ்வதி தேவிக்கு விருப்பமான மஞ்சள் வண்ண உடை உடுத்த வேண்டும். வீட்டையும் பூஜையறையையும் சுத்தம் செய்து பூஜையறையில் கோலமிட்டு ஒரு மரப்பலகை போட்டு அதன் மேல் புதிய மஞ்சள் நிற வஸ்திரத்தை விரித்து விடல் வேண்டும்.
பின் சரஸ்வதி தேவியின் விக்கிரகத்தை அல்லது திருவுருவப் படத்தை மஞ்சள் நீராட்டி, பின் மஞ்சள் நிற ஆடை சாற்றி மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய்வேத்தியமாக மஞ்சள் நிற போளி, கேசரி, பொங்கல், பால் பாயாசம் என்பவற்றை படைத்து தூபதீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.
சரஸ்வதி தேவி ஸ்லோகம்
“சரஸ்வதி நமஸ்த்துப்யம்
வாரே காமரூபினி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
சித்தர் போதுமே ஸதா” என்ற ஸ்லோகத்தை உச்சரித்து வர பரிபூரண அருளைப் பெறலாம்.
மேலும் படிக்க | சனி சுக்கிரன் சேர்க்கை: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், தினம் தினம் பண மழைதான்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ