தீபாவளி மாதத்தில் வலுவிழந்து செவ்வாயுடன் சேரும் சூரியன்! பாவம் வாங்கிக் கட்டிக் கொள்ளப்போகும் 4 ராசிகள்!

Surya - Mangal Yuti Alert : சூரியனும் செவ்வாயும் இணைந்து மோசமான நேரத்தை கொடுத்தால்? அசுப காரியங்களுக்கு அடிபோடும் சூரிய மங்கள யோகம் 12 ராசிகளுக்குமான பலன்கள்... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 23, 2024, 04:09 PM IST
  • சூரிய மங்கள யோகத்தால் கஷ்டப்படப்போகும் ராசிகள்!
  • கிரகங்களில் ராஜாவுடன் இணையும் செவ்வாய்
  • செவ்வாய் கொடுக்கும் அமங்கல பலன்கள்
தீபாவளி மாதத்தில் வலுவிழந்து செவ்வாயுடன் சேரும் சூரியன்! பாவம் வாங்கிக் கட்டிக் கொள்ளப்போகும் 4 ராசிகள்! title=

அக்டோபர் 17ம் நாள்அன்று, சூரியன் துலாம் ராசியில் நுழைந்தார், மூன்று நாட்களுக்குப் பிறகு, அதாவது அக்டோபர் 20 அன்று, செவ்வாய் கடகத்தில் நுழைந்தார். முக்கியமான இரண்டு கிரகங்களும் நவம்பர் 16 வரை துலாம் ராசியிலே இருப்பார்கள். சூரியன் விருச்சிக ராசிக்கு பெயரும் வரை, மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களும் கவனமாக இருக்க வேண்டும். வலுவிழந்த சூரியன் மற்றும் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகளை விரிவாக அறிந்து கொள்வோம்.

சூரியனும் செவ்வாயும் இணைவதால் ஏற்படும் சூரிய மங்கள தோஷம் சிலருக்கு யோகமாக இருக்கலாம். ஆனால், தற்போது இந்த முக்கியமான இரு கிரகங்களும் ஒன்றிணைந்து இருப்பது பல ராசிகளுக்கு மோசமான பலன்களைக் கொடுக்கும்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மற்றும் சூரியனின் ஸ்தானத்தின் தாக்கம் வாழ்க்கையில் சில சவால்களைக் கொண்டு வரும். வாழ்க்கைத்துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் மனக்கசப்பு அதிகரிக்கும், மேஷ ராசிக்காரர்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சமய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு நல்ல காலம் இது.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு நிலம், கட்டிடம் போன்ற சொத்துக்களால் லாபம் கிடைக்கும், ஆனால் வீட்டில் அமைதியின்மை ஏற்படலாம். இந்த நேரத்தில் திருமணமான பெண்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பலவீனம், தசை வலி மற்றும் மன அழுத்தத்தை கையாள்வதில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்: மிதுனம் ராசிக்காரர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். வீட்டில், குறிப்பாக குடும்ப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும் வேலை ஏற்படலாம். எந்தவொரு முக்கியமான முடிவையும் தவிர்ப்பது நல்லது.

கடகம்:  கடக ராசிக்காரர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் சூரிய மங்கள தோஷம், கட்டுப்பாட்டை மீறி செயல்பட வைக்கலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கலாம். பணியிடத்தில் மரியாதை கிடைக்கும் என்றலும், பதற்றமான சூழ்நிலைகள் உருவாகலாம்.

மேலும் படிக்க | இந்த ரெண்டு கிரகங்களும் சேர்ந்தால் எப்போதுமே யோகம் தான்! புதனும் சூரியனும் இணையும் புதாதித்ய ராஜயோகம்!

சிம்மம்: சிம்ம ராசியினருக்கு பாதகமான பலன்கள் ஏற்படும், சகோதர சகோதரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கோபத்தை அதிகரிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அக்கம் பக்கத்தினர் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் பயணம் செய்வது சாதகமானதாக இருக்கும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படும். வாய் வார்த்தைகள் தான் ஈகோ பிரச்சனைகளை உண்டாக்கும் என்பதால் உங்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும். அறிவை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் வரும். எதிர்பாராத ஆதாயங்கள் மகிழ்ச்சியைத் தரும்.  

துலாம்: சூரியனும் செவ்வாயும் நீச்சத்தில் இருப்பதால், பணியிடத்தில் ஈகோ காரணமாக பிரச்சனைகள் ஏற்படலாம். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாக்குவாதங்கள் மற்றும் தகராறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க மெளனமாக இருப்பது நல்லது.  

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆன்மீக பயணங்கள் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் சச்சரவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இளைய சகோதரிகள் மற்றும் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இரத்த அழுத்தம், இதயப் பிரச்சனைகள், மன உளைச்சல் மற்றும் தூக்கமின்மை போன்றவற்றை தவிர்க்க தியானம் செய்யலாம்.  

மேலும் படிக்க | தீபாவளி 2024: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்... சனி பகவானின் விசேஷ அருள் கிட்டும்

தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு திடீர் செலவுகள் ஏற்படும். குழந்தைகளின் செலவுகள் அதிகரிப்பதோடு, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மூதாதையர் சொத்து தொடர்பான கருத்து வேறுபாடுகள் வரும். பணியிடத்தில், குறிப்பாக மேலதிகாரிகளுடன் மோதல்கள் மற்றும் சச்சரவுகள் சாத்தியமாகும். 

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு, வாழ்க்கை துணை மற்றும் நண்பர்களிடையே பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீட்டில் சூழ்நிலை திடீரென மாறும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். குடும்பத்தில் மூத்த சகோதர சகோதரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம்.

கும்பம்:  பணியிட மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருந்தாலும், நிதானமாக செயல்பட்டால், கும்ப ராசிக்கார்களுக்கு இந்த சூரிய மங்கள யோகம் நன்றாகவே இருக்கும். கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் தந்தை அல்லது பெரியவர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். பயணத்தின் போது கவனமாக இருங்கள்.

மீனம்: பேச்சைக் கட்டுப்படுத்துவது முக்கியம் என்பதை மீன ராசிக்காரர்கள் தெரிந்துக் கொள்ளாவிட்டால், சர்ச்சைகள் ஏற்படலாம். உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். முதலீடு செய்யும் போது கவனமாக இருங்கள்.  

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | தந்தேரஸ் நாளில் பணமழையை பொழியப்போகும் சுக்கிரன்! லக்ஷ்மி-நாராயண யோகத்தால் ஜாலி தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News