2-வது ODI: போட்டியை வெல்லுமா இந்தியா!

Last Updated : Oct 25, 2017, 08:40 AM IST
2-வது ODI: போட்டியை வெல்லுமா இந்தியா! title=

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று நடைபெறுகிறது!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றது. இத்தொடரின் இரண்டாவது ஒருநாள் இன்று நடைபெறுகின்றது.

முன்னதாக முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றிபெற்றது. 3 ஒருநாள் கொண்ட இத்தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

இன்றைய போட்டியில் அணிகள் விவரம்:-

இந்தியா அணிகள்: விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், அஜிங்க்யா ரகானே, மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.டோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர்

நியூசிலாந்து அணிகள்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டாம் புரூஸ், கோலின் டி கிராண்ட்ஹோம், மார்டின் கப்தில், மேத்யூ ஹென்றி, டாம் லதாம், ஹென்றி நிகோல்ஸ், ஆடம் மில்னி, கோலின் மன்றோ, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தீ, ராஸ் டெய்லர், ஜார்ஜ் வொர்க்கர், ஈஷ் சோதி.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுடன் தொடரில், இந்தியா 4-1 என்ற கணக்கில் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது!

Trending News