3-வது டெஸ்ட்.: தொடரையும் கைப்பற்றி இந்தியா அபார வெற்றி!!

Last Updated : Oct 12, 2016, 10:34 AM IST
3-வது டெஸ்ட்.: தொடரையும் கைப்பற்றி இந்தியா அபார வெற்றி!!  title=

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 321 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் ஹாட்ரிக் வெற்றி டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் 197 ரன்கள் வித்தி யாசத்தில் இந்தியா வென்றது. கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்டில் 174 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 557 ரன்களை குவித்து பிறகு முதல் இன்னிங்சை இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதில் கேப்டன் விராட் கோஹ்லி இரட்டை சதமடித்து அசத்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 299 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் அந்த அணி பாலோ ஆனை தவிர்க்க 358 ரன் எடுக்க வேண்டும்.எனவே குறை வான ரன்கள் எடுத்ததால் 'பாலோஆன்' நிலைக்கு அந்த அணி தள்ளப்பட்டது. ஆனால் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி  நியூசிலாந்து அணிக்கு 'பாலோ ஆன்' கொடுக்காமல் இந்தியா 2-வது இன்னிங்சை விளையாடியது. 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 216 ரன்கள் எடுத்த போது ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக கேப்டன் விராட் கோஹ்லி அறிவித்தார்.

நியூசிலாந்து அணி வெற்றி பெற 475 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. குறிப்பாக அஸ்வின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து அவிட் ஆகினார்கள். இறுதியில் நியூசிலாந்து அணி 153 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டு களையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்திய அணி 321 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக இந்திய அணி கைப்பற்றியுள்ளது.  மேலும் இந்திய அணி சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. 

அபாரமாக பந்து வீசிய அஸ்வின் 3-வது போட்டியில் 13 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்த தொடரில் மொத்தம் 27 விக்கெட்டுகள் கைப்பற்றியதால் அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

 

Trending News