1st Test; நான்காம் நாள் போட்டி: இந்தியா வெற்றி பெற இன்னும் 6 விக்கெட் தேவை....
12:15 PM - 8 Dec 2018
1st Test; நான்காம் நாள் போட்டி: 84 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா....
12:00 PM - 8 Dec 2018
1st Test; நான்காம் நாள் போட்டி: 84 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா....
1st Test. 33.6: R Ashwin to S Marsh (22), 4 runs, 84/3 https://t.co/bkvbHd9pQy #AusvInd
— BCCI (@BCCI) December 9, 2018
11:03 | 09-12-2018
1st Test: 53 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா....
1st Test. 19.2: R Ashwin to S Marsh (8), 4 runs, 53/2 https://t.co/bkvbHd9pQy #AusvInd
— BCCI (@BCCI) December 9, 2018
INDvsAUS முதல் டெஸ்ட்; 4 ஆம் நாள்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா...
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 235 ரன்னில் சுருண்டது.
15 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 40 ரன்னுடனும், ரகானே 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். புஜாரா 140 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ரகானே நம்பிக்கையுடன் விளையாடினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் சீராக உயர்ந்து கொண்டே வந்தது.
இந்தியாவின் ஸ்கோர் 234 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. புஜாரா 204 பந்தில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா - ரகானே ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தது. அடுத்து ரோகித் சர்மா களம் இறங்கினார். இவர் 1 ரன் எடுத்த நிலையில் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ரகானே உடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். ரகானே 111 பந்தில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 4-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் சேர்த்தது. ரகானே 57 ரன்களுடனும், ரிஷப் பந்த் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது இந்தியா 275 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது.
மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நாதன் லயன் ஓவரில் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் விளாசினார். ஆனால் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 16 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார். அப்போது இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த அஸ்வின் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ரகானே 70 ரன்னில் ஆட்டமிழந்தார். அத்துடன் ஏறக்குறைய இந்தியாவின் இன்னிங்ஸ் முடிவிற்கு வந்தது.
முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் டக்அவுட்டில் வெளியேற இந்தியா 106.5 ஓவரில் 307 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஏற்கனவே முதல் இன்னிங்சில் 15 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலியா அணி சார்பில் நாதன் லயன் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.