இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனின் 'விரக்தியடைந்த கிரிக்கெட் வீரர்' கருத்துக்களை மேற்கொள்காட்டி, அசாருதீன் இந்த விஷயத்தை "தனிப்பட்டதாக" மாற்றுவதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் (HCA) தலைவராக இருக்கும் அசாருதீன், சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேனை ‘விரக்தியடைந்த கிரிக்கெட் வீரர்’ என்று அழைத்ததையடுத்து ராயுடுவின் கோபத்தை சம்பாதித்தார். HCA அதிகாரிகள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அம்பத்தி ராயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட, அசார் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அசாரின் கருத்துக்களுக்கு பதிலளித்த ராயுடு, இந்த பிரச்சினை இரு வீரர்களை விட பெரியது என்றும், HCA-ஐ சுத்தம் செய்ய அசார் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "இதை தாங்கள் தனிப்பட்டதாக மாற்றக்கூடாது. பிரச்சினை இரண்டுமே பெரியது. HCA-வில் என்ன நடக்கிறது என்பது நாம் இருவருமே அறிந்தது. ஹைட்ரபாத் கிரிக்கெட் அசோசியேசனை சுத்தம் செய்ய ஒரு கடவுள் வாய்ப்பு அளித்துள்ளார். நான் கடுமையாக கேட்டுக்கொள்கிறேன். வருங்கால கிரிக்கெட் வீரர்களின் தலைமுறைகள் நன்மை பெற உதவுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 22), HCA பணத்தால் பாதிக்கப்படுவதாக ராயுடு குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "ஊழலால் பாதிக்கப்பட்டுள்ள ஹைட்ரபாத் கிரிக்கெட் அசோசியேசனில் இருந்து எப்படி மிகச்சிறந்த வீரர்களை எதிர்பார்க்க முடியும். ஊழல் நிறைந்த மக்கள் குவிந்துள்ள இடத்தில் இருந்து திறமையான வீரர்களை காப்பாற்ற, ஊழல்வாதிகளை அப்புறப்படுத்த வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, இந்தியாவின் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படாததால் இந்த ஆண்டு தொடக்கத்தில் ராயுடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும், ஆகஸ்டில் களத்தில் திரும்ப முடிவு செய்த அவர், ஹைதராபாத்தை விஜய் ஹசாரே டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டிகளில் விளையாடினார்.
ஹைதராபாத் பேட்ஸ்மேன் 55 ஒருநாள் போட்டிகளில் 1,694 ரன்கள் குவித்தும் மற்றும் ஆறு டி20 சர்வதேச போட்டிகளிலும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.