INDvPAK ஆசியா கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான். முதலில் பேட்டிங் தேர்வு

சாம்பியன்ஸ் கோப்பை தோல்வி, பழிதீர்க்குமா? இந்தியா. இன்று மாலை 5 மணிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதுகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 19, 2018, 04:37 PM IST
INDvPAK ஆசியா கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான். முதலில் பேட்டிங் தேர்வு title=

டாஸ் வென்ற பாகிஸ்தான். முதலில் பேட்டிங் தேர்வு. இந்திய அணியில் ஷர்துல் மற்றும் காலேலுக்கு பதிலாக பும்ரா மற்றும் பாண்டியா இடம் பெற்றுள்ளனர்

 


துபாயில் நடைபெற்று வரும் ஆசியா கோப்பை தொடரின் 5வது போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் "பி" பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதுகின்றன. இந்த போட்டி துபாய் சர்வதேச விளையாட்டு மைதானத்தில், இன்று மாலை 5 மணிக்கு தொடங்க உள்ளது. 

ஆசியா தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. நேற்று நடந்த முதல் போட்டியில் ஹாங்காங் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

ஹாங்காங் அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடமும், இரண்டாவது போட்டோயில் இந்தியாவிடமும் தோல்வி அடைந்ததால், ஆசியா கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. 

"ஏ" இரண்டு போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை அணி வெளியேறியது. அந்த பிரிவில் வங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. "பி" பிரிவில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 

இன்று நடைபெறும் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமேயில்லை. இந்தியா, பாகிஸ்தான் மோதுகிறது என்றாலே உலக முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைபற்றியது பாகிஸ்தான் அணி. அதன பிறகு இரு அணிகளும் ஆசியா தொடரில் மோத உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு இரு நாட்டு ரசிகளிடையே எழுந்துள்ளது.

 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை போட்டிகளில் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 6 முறையும் பாகிஸ்தான் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

ஆசியா கோப்பையை இந்தியா ஆறு முறையும், பாகிஸ்தான் இரண்டு முறையும் வென்றுள்ளது

Trending News