Team India, Sarfaraz Khan Playing in IND vs ENG 3rd Test: இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று தொடங்கும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் அறிமுகமாகி உள்ளார். தொடர்ந்து, அவர் அனில் கும்ப்ளேவிடம் இருந்து தனது இந்திய அணி டெஸ்ட் தொப்பியை வாங்கினார். குறிப்பாக, இந்திய அணியின் 311ஆவது வீரராக சர்ஃபராஸ் கான் அறிமுகமாகி உள்ளார்.
நீண்ட போராட்டத்திற்கும், காத்திருப்பிற்கும் பிறகு சர்ஃபராஸ் கான் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், அவரது குடும்பத்திற்கும் இது ஒரு பெரிய தருணமாக அமைந்தது. போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அவரது தந்தை மற்றும் சர்ஃபராஸ் கானின் மனைவி உள்ளிட்டோர் வந்திருந்தனர். அப்போது, சர்ஃபராஸ் கான் இந்திய அணி தொப்பி வாங்கிய பின்னர் குடும்பத்தினர் வாழ்த்து பெற வந்தார்.
'கிரிக்கெட் அனைவருக்குமானது'
அப்போது, சர்ஃபராஸ் கானின் தந்தை நௌஷத் கான், அவரை கட்டுபிடித்து அரவணைத்துக்கொண்டார். குறிப்பாக, இந்திய அணியின் தொப்பியை முத்தமிட்டது மட்டுமின்றி உணர்ச்சிவசத்தில் ஆனந்த கண்ணீர்விட்டும் தனது அளவில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்பாரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
மேலும் படிக்க | 'டி20 உலகக் கோப்பையில் இவர் தான் கேப்டன்...' உண்மையை போட்டுடைத்த ஜெய் ஷா
Sarfaraz Khan's father kissing the Test cap of his son.
- Emotions at Rajkot. pic.twitter.com/ozhkxDmPvF
— Johns. (@CricCrazyJohns) February 15, 2024
குறிப்பாக, சர்ஃபராஸ் கானின் தந்தை நௌஷத் கான் இன்று அணிந்திருந்த டீ-சர்ட்டில் 'கிரிக்கெட் ஜென்டில்மேன்களின் விளையாட்டு' (Cricket is Gentleman's Game) என குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்த வாசகத்தில் ஜென்டில்மேன்களின் என்ற வார்த்தை அடிக்கப்பட்டு 'அனைவருக்குமான' (Cricket is Everyone's game) என சேர்க்கப்பட்டிருந்தது.
ரஞ்சி டிராபியில் ஜொலித்த சர்ஃபராஸ் கான்
மும்பை சேர்ந்த 26 வயது வீரரான சர்ஃபராஸ் கான் ரஞ்சி டிராபியில் கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக விளையாடி வந்தாலும், இந்திய அணியில் அவருக்கான இடம் என்பது மிகவும் கேள்விக்குறியாகவே இருந்தது. இந்த தொடரில் அனுபவ வீரர் கேஎல் ராகுலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக சர்ஃபராஸ் கானுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைத்துள்ளது.
Vido of the day.
Emotions from Sarfaraz Khan, his father & wife during cap presentation - he has made everyone proud. pic.twitter.com/JeXsmeKoof
— Johns. (@CricCrazyJohns) February 15, 2024
2022-23 ரஞ்சி டிராபி சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 556 ரன்களை குவித்தார். இதில், 92.66 என்ற சராசரியுடன் மூன்று சதங்களும் அடக்கம். 2021-2022 ரஞ்சி டிராப சீசனிலும் 982 ரன்களை குவித்தார். இதில், 122.75 என்ற சராசரியை அவர் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பரிதாப நிலையில் இந்தியா
சர்ஃபராஸ் கான் உடன் விக்கெட் கீப்பராக துருவ் ஜூரேலும் இன்றைய போட்டியில் அறிமுகமாகி உள்ளார். கேஎஸ் பரத்தால் பெரியளவில் ரன்களை குவிக்க இயலாத காரணத்தால் அவருக்கு பதில் துருவ் ஜூரேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Sarfaraz Hugging his father after getting the India cap.
- The moment of the series. pic.twitter.com/dcAnwx1zU3
— Johns. (@CricCrazyJohns) February 15, 2024
இதன்மூலம், இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் அனுபவமற்றதாக காணப்படுகிறது. இன்றைய போட்டியின் தொடக்கத்திலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ரஜத் பட்டிதார் ஆகிய இளம் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் தற்போது களத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க | IPL 2024 Final date: ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி நடைபெறும் தேதி இதுதான்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ