வங்கதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக டேனியல் விட்டோரி?

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் விட்டோரி வங்கதேச கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Last Updated : Jul 28, 2019, 01:39 PM IST
வங்கதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக டேனியல் விட்டோரி? title=

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் விட்டோரி வங்கதேச கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் விட்டோரி மற்றும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சார்ல் லாங்கேவெல்ட் ஆகியோர் வங்கதேச கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அறிவித்துள்ளது.

சுனில் ஜோஷியிடம் சுழற்பந்து பயிற்சி பொறுப்பை ஏற்றுள்ள விட்டோரி 100 நாட்கள் எனும் குறுகிய கால அடிப்படையில் சுழற்பந்து வீச்சாளர்களை மேற்பார்வையிடுவார் எனவும், வேகப்பந்து வீச்சாளர் பொறுப்பான கர்ட்னி வால்ஷுக்கு பதிலாக லாங்கேவெல்ட் இருப்பார் என்று பிசிபி தலைவர் நஸ்முல் ஹசன் பாப்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நஸ்முல் ஹாசன் தெரிவிக்கையில்., "விட்டோரியுடன் நாங்கள் இன்னும் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்றாலும், அவர் எங்களுடன் பணியாற்ற ஒப்புக் கொண்டார். லாங்கேவெல்ட்டிடமிருந்தும் எங்களுக்கு உறுதிப்படுத்தல் கிடைத்தது," என்று தெரிவித்துள்ளார்.

பிளாக் கேப் போட்டியாளர்களின் சாதனை நாயகன் விட்டோரி, நவம்பர் மாதம் இந்திய சுற்றுப்பயணத்துடன் வங்கதேசம் தொடங்கும் தொடரில் துவங்கி, அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக டி20 வரை வங்கதேச பயிற்சியாளராக பணியாற்றுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விட்டோரி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், பிக் பிளாஸ் அணி பிரிஸ்பேன் ஹீட் அணிக்கும் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News