Mahi and his Honey! வைரலான  தோனியின் புகைப்படம்!

தோனியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - RK Spark | Last Updated : Nov 18, 2021, 12:42 PM IST
Mahi and his Honey! வைரலான  தோனியின் புகைப்படம்!  title=

தோனி தனது வளர்ப்புப் பிராணியான கிளியுடன் டீ குடிக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  ஐபிஎல் 2021 மற்றும் உலக கோப்பை போட்டிகள் முடிந்த பிறகு தற்போது தனது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார் மகேந்திரசிங் தோனி.  ஓய்வில்லாமல் மூன்று மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு பிறகு தற்போது தனது விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார். 

ALSO READ நான் வீழ்வேனென்று நினைத்தாயோ! தொடரும் அஸ்வினின் மாயாஜாலம்!

ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடம் கோப்பையை கைப்பற்றியது.  கடந்த வருடம் முதல் முறையாக பிளே ஆப்பிற்கு தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை அணி இந்த ஆண்டு முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று கோப்பையை வென்றது.  அதன்பிறகு யாரும் எதிர்பார்க்காத விதமாக டி20 உலக கோப்பை அணியில் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டார்.  ஆனாலும் எதிர்பாராத விதமாக இந்திய அணி அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.  அதன்பின் தற்போது தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார் தோனி. 

 

சமூக வலைத்தளங்களில் பெரிதும் ஆக்டிவாக இல்லாத தோனியின் மனைவி சாக்சி அவ்வப்போது சில புகைப்படங்களை பதிவேற்றி வருவார்.  பெரும்பாலும் அவர்களது குழந்தை அல்லது விலங்குகளின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார் சாக்சி.  தற்போது நேற்று தோனி டீ குடிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  தனது தோள்பட்டையில் அவரது வளர்க்கும் கிளியுடன் தோனி டீ குடிப்பது போல் உள்ள புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.  'Mahi and his Honey' என்ற வாசகத்துடன் இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சாக்சி.   இனி தமிழகத்தில் உள்ள டீக்கடைகளில் தோனியின் இந்த புகைப்படத்தை கடைக்காரர்கள் வைத்தாலும் ஆச்சரியம் இல்லை.

ALSO READ இந்தியாவில் நடைபெறப்போகும் 3 உலக கோப்பை போட்டிகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News