ICC_WC_2019 : டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு!

இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது!

Last Updated : Jun 30, 2019, 06:01 PM IST
ICC_WC_2019 : டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு! title=

05:55 PM 30-06-2019

40 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்துள்ளது!

களத்தில் | ஜோ ரூட் 33(42), பென் ஸ்டோக்ஸ் 27(23)


03:49 PM 30-06-2019

10 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பு இன்றி 47 ரன்கள் குவிப்பு.

களத்தில் | பாரிஸ்டோவ் 25(37), ராய் 20(23)


03:27 PM 30-06-2019

5 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் குவித்துள்ளது. பேரிஸ்டோவ் 17(22), ராய் 9(8) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.


இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது!

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019, இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் 38-வது லீக் ஆட்டம் எட்க்பாஸ்டன், பிர்மிங்க்ஹாம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இதுவரை விளையாடிய போட்டிகளில் 5-ல் வெற்றி, ஒன்றில் முடிவில்லை என 11 புள்ளிகள் பெற்று புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா மேலும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் தனது அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும். அதேவேளையில் இந்தியாவை எதிர்த்து விளையாடும் இங்கிலாந்து அணி 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கும் நிலையில், தான் விளையாடவிருக்கும் அடுத்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் உள்ளது.

இந்நிலையில் இன்றை போட்டி இங்கிலாந்துக்கு வாழ்வா சாவா போட்டியாக கருதப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

இன்றைய போட்டியில் இந்தியா ஆரஞ்ச் நிற ஆடையில் களமிறகங்குகிறது. இந்திய அணியில் தமிழக வீரர் விஜய் சங்கருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரிஷாப் பன்ட் களமிறங்குகிறார். 

Trending News