ரன் அவுட்டால் மாறிய மேட்ச்! மீண்டும் பேட்டிங்கில் சொதப்பிய ஆர்சிபி

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

Written by - RK Spark | Last Updated : Apr 26, 2022, 11:27 PM IST
  • தொடர்ந்து சொதப்பி வரும் ஆர்.சி.பி.
  • ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி.
  • பேட்டிங்கில் சொதப்பல்.
ரன் அவுட்டால் மாறிய மேட்ச்! மீண்டும் பேட்டிங்கில் சொதப்பிய ஆர்சிபி title=

ஐபிஎல் 2022-ன் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டி புனேவில் உள்ள மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. கடந்த போட்டியில் மிகவும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி இருந்த பெங்களூரு அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

 

மேலும் படிக்க | சென்னை சூப்பர் கிங்ஸூக்கு இருக்கும் கடைசி ஆயுதம்

ஆர்சிபி அணியின் அசத்தலான பவுலிங்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை திணறடித்தது. ஐபிஎல் 2022-ல் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் ஒருவரான ஜோஸ் பட்லரை 8 ரன்களில் வெளியேற்றியது ஆர்சிபி. மற்றொரு ஓபனிங் வீரரான படிக்கல் 7 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அஸ்வின் 17 ரன்களும், கேப்டன் சாம்சன் 27 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினர். அதன் பிறகு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, ரியான் பராக் 31 ரன்களில் 56 ரன்களை விளாசி அணியை சரிவிலிருந்து மீட்டார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் அடித்தது.

 

ஐபில் 2022-ல் தொடர்ந்து சொதப்பி வரும் விராட் கோலி இந்த போட்டியில் ஓபனிங் வீரராக களமிறங்கினார், இருப்பினும் 9 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். பாப் டு பிளேஸி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் வில, தினேஷ் கார்த்திக் அணியை வெற்றி பெறச் செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

மேலும் படிக்க | CSK அழைப்புக்காக காத்திருக்கிறேன் - தினேஷ் கார்த்திக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News