கேப்டனாகவும் "ஹிட்" அடிக்கும் HITMAN -டேட்டா சொல்லும் விவரம்!

20 ஓவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் "ஹிட்மேன்" ரோகித் சர்மா, இதுவரை இந்திய அணிக்கு தலைமை தாங்கிய 20 போட்டிகளில் 16 போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்து அசத்தியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 19, 2021, 06:27 PM IST
கேப்டனாகவும் "ஹிட்" அடிக்கும் HITMAN  -டேட்டா சொல்லும் விவரம்!

20 ஓவர் இந்திய கிரிக்கெட் அணியின்கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் "ஹிட்மேன்" ரோகித் சர்மா, இதுவரை இந்திய அணிக்கு தலைமை தாங்கிய 20 போட்டிகளில் 16 போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்து அசத்தியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி (Virat Kohli) மீது அண்மைக் காலமாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி சாதனை படைத்திருந்தாலும், ஐசிசி (ICC) நடத்தும் தொடர்களில் ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்களில் விராட் தலைமையிலான இந்திய அணி வெறும் கையுடனேயே தாயகம் திரும்பியது. இதனால், கேப்டனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் உரக்க எழத் தொடங்கியது.

இதனை புரிந்து கொண்ட கோலியும் உலகக்கோப்பையுடன், 20 ஓவர் இந்திய அணியின் கேப்டன்சியில் இருந்து விலகிக் கொண்டார். புதிய கேப்டனாக ரோகித் சர்மா (Rohit Sharma) தேர்வு செய்யப்பட்டார். அவரை தேர்வு செய்ததற்கான காரணம் வெளிப்படையான ஒன்று தான். ஐ.பி.எல் (IPL) தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா, இதுவரை 5 முறை கோப்பைகளை வென்றுள்ளார். 129 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். அதில் 75 போட்டிகளில் மும்பை அணி வெற்றியும், 50 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. 4 போட்டிகள் சமனில் முடிவடைந்துள்ளன. விகிதாசாரத்தின் அடிப்படையில் 59.68 விழுக்காடு வெற்றிகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ளார். 

ALSO READ |  Best Captain: சிறந்த கேப்டன் ரோஹித் சர்மாவா? விராட் கோலியா?

அதேநேரத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, அவரது தலைமையில் 204 போட்டிகளில் விளையாடி 121 வெற்றிகளையும், 82 தோல்விகளையும் சந்தித்துள்ளது. தோனியின் வெற்றி விழுக்காடு 59.60.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கு கேப்டனாக இருந்த கோலி தலைமையில் அந்த அணி 140 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 64 -ல் வெற்றியும், 69 -ல் தோல்வியும் சந்தித்துள்ளது. 3 போட்டிகள் சமனிலும், 4 போட்டிகளில் முடிவும் கிடைக்கவில்லை. ஐ.பி.எல்லில் கோலியின் வெற்றி விழுக்காடு 48.16. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த காம்பீர் தலைமையில் அந்த அணி 129 போட்டிகளில் விளையாடியுள்ளது. 71 போட்டிகளில் வெற்றியும், 57 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், கேப்டனாக காம்பீரின் வெற்றி விழுக்காடு 55.42 ஆகும்.

தோனி, ரோகித், கோலி மற்றும் காம்பீர் ஆகியோர் ஐ.பி.எல் தொடரில் ஒரு அணிக்கு அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர்கள். அவர்களில் வெற்றி சராசரியின் அடிப்படையில் ரோகித் சர்மாவே முதலிடம் வகிக்கிறார். 

ALSO READ |  இந்திய அணியின் டி20 கேப்டனாக ரோஹித் சர்மாவின் சாதனை!

20 ஓவர் போட்டிகளில் இந்திய அணிக்கு முதல் 20 போட்டிகளில் அதிக வெற்றிகளைத் தேடி தந்தவர்கள் பட்டியலிலும் ரோகித் சர்மாவே முதல் இடத்தில் உள்ளார். ஏற்கனவே கூறியதுபோல், 20 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ள அவரது தலைமையிலான இந்திய அணி 16 போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளது. 12 வெற்றிகளுடன் கோலி 2வது இடத்திலும், 10 வெற்றிகளுடன் தோனி 3வது இடத்திலும் இருக்கின்றனர்.

அதேநேரத்தில் கோலி மற்றும் தோனி ஆகியோர் இந்திய அணிக்கு கேப்டனாக அளித்த பங்களிப்பை யாரும் குறை சொல்லிவிட முடியாது. கேப்டனாக பொறுப்பேற்ற ஆறே ஆண்டுகளில் 20 ஓவர் உலகக்கோப்பை உள்ளிட்ட 3 ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தவர் தோனி. 

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணிலேயே வீழ்த்து இந்தியா வராலற்று வெற்றியை பதிவு செய்தது கோலி தலைமையிலான இந்திய அணி தான். இங்கு கூற வருவது என்னவென்றால், இந்திய அணிக்கு இப்போது தலைமையேற்றிக்கும் ரோகித்தும், இந்திய அணியை முன்னோர்களைவிட ஒருபடி மேலே எடுத்துச் செல்வார் என்பது தான்.

ALSO READ |  ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு இடையே என்ன பிரச்சனை? பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பதில்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News