இன்று (செப்டம்பர் 2) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் போட்டி (England vs India, 4th Test) லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் குறித்த விவரங்களை இரண்டு அணிகளும் அறிவித்துள்ளது. ஆனால் போட்டி ஆரம்பிக்கும் முன்பே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி (Indian cricket coach Ravi Shastri), லார்ட்ஸை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், லீட்ஸ் பற்றி மறந்துவிடுங்கள் என்று கூறி உற்சாக மந்திரத்தை அணிக்கு வழங்கினார்.
டைம்ஸ் நவ் நவபாரத் செய்தி சேனலில் ரவி சாஸ்திரி (Ravi Shastri) கூறியதாக மேற்கோள் காட்டியுள்ளது. அதில் "இது (நான்காவது டெஸ்ட் போட்டி) எளிதானது, நீங்கள் லார்ட்ஸை நினைவில் வைத்துக்கொண்டு, லீட்ஸ் மறந்துவிடுங்கள். நல்ல தருணங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதுபோன்ற விஷயங்கள் (வெற்றி, தோல்வி) போட்டிகளில் நடந்து கொண்டே இருக்கும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
மூன்றாவது டெஸ்ட் குறித்து ரவி சாஸ்திரி கூறியது:
மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால், இந்திய அணி எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். ஆனால் அதே போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர்கள் எதிரணிக்கு சவால் விடும் வகையில் விளையாடினார்கள்.
கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி சிறப்பாக பந்து வீசியது. அவர்கள் முதல் நாளே நம்மைத் திணறடித்தனர். இருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸில், நாங்கள் சில சவால்களைக் கொடுத்தோம்.
ALSO READ | ICC Test Rankings: ரூட் முதலிடத்தில்; விராட் கோலியை முந்தினார் ரோஹித்
இரண்டு பேருக்கும் இடையே நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது:
ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலிக்கு (Virat Kohli) இடையே ஏற்பட்ட விரிசல் குறித்து கேட்டபோது, பதில் அளித்த ரவி சாஸ்திரி, "இரு வீரர்களுக்கிடையில் எந்த வாக்குவாதமும், விரிசலும் இல்லை என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், "இது போன்ற எதையும் நான் பார்த்ததில்லை. பலர் என்னிடம் கேட்கும்போது, நீங்கள் பார்த்ததை நான் பார்க்கவில்லை என்றுதான் சொல்கிறேன். இரண்டு பேருக்கும் இடையே நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது" என்றார்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு:
இன்றைய டெஸ்ட் போட்டியில் (4th Test) டாஸ் வென்ற இங்கிலாந்து அணி (England won the toss) பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். இந்த போட்டியில் வெற்றியை பதிவு செய்து முன்னிலை பெற இரண்டு அணிகளும் கடுமையாக போரடவுள்ளது.
ALSO READ | 4th Test: டாஸ் வென்றது இங்கிலாந்து; இந்தியா பேட்டிங்; அஷ்வினுக்கு இடம் இல்லை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR