உலகக்கோப்பை மகளிர் ஹாக்கி 2018: காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

இந்திய மகளிர் ஹாக்கி அணி உலகக் கோப்பை போட்டியின் காலிறுதி சுற்றுக்கு நுழைந்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 1, 2018, 04:42 PM IST
உலகக்கோப்பை மகளிர் ஹாக்கி 2018: காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா title=

இங்கிலாந்தில் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்று உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் நான்கு அணிகள் என மொத்தம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் இந்தியா அணி "பி" பிரிவில் இடம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெரும். 2 மற்றும் 3 வது இடத்தைப் பிடிக்கும் அணிகள் "ஃபிளே ஆப்" சுற்று ஆட்டத்தில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெரும்.

இந்தியாவை பொருத்த வரை தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடனான ஆட்டம் (1-1) டிராவானது. இரண்டாவது ஆட்டத்தில் அயர்லாந்து அணியிடம் 1-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதனால் காலிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் அமெரி்க்காவுடனான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் கண்டது. இந்த ஆட்டம் 1-1 என சமநிலை முடிந்ததால், இந்திய அணி "ஃபிளே ஆப்" சுற்றுக்கு தகுதி பெற்றது. 

 

"ஃபிளே ஆப்" சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்றால் காலிறுதிக்கு தகுதி பெரும் என்ற நிலையில், இத்தாலி அணியுடன் மோதியது இந்திய அணி. ஆட்டம் ஆரம்ப முதலே நிதானமாக இந்திய அணி விளையாடியது. இந்திய வீராங்கனை லால்ரேம் சியாமி 9_வது நிமிடத்தில் முதல் கோலை போட்டார். 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. இத்தாலி வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. கடைசியா இந்திய அணி 45 மற்றும் 55 வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் போட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தினர். 

 

இதன் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஃபிளே ஆப்" சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. நாளை நடைபெற உள்ள காலிறுதி ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அதேபோல இங்கிலாந்து அணியும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

 

இன்று மற்றும் நாளை நடைபெற்ற உள்ள காலிறுதி ஆட்டத்தில் கலந்துக்கொள்ளும் நான்கு அணிகள் விவரம்:

ஆகஸ்ட் 1 ஆம் தேதி: 

முதல் ஆட்டம்: ஜெர்மனி vs ஸ்பெயின் (மாலை 6 மணி) 
இரண்டாம் ஆட்டம்: ஆஸ்திரேலியா vs அர்ஜென்டீனா (இரவு 8.15)

ஆகஸ்ட் 2 ஆம் தேதி:

முதல் ஆட்டம்: அயர்லாந்து vs இந்தியா (மாலை 6 மணி) 
இரண்டாம் ஆட்டம்: நெதர்லாந்து vs இங்கிலாந்து (இரவு 8.15)

இதில் வெற்றி பெரும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெரும். அரையிறுதி ஆட்டம் வரும் சனிக்கிழமை நடைபெறும். அடுத்த நாள் இறுதிபோட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News