WI vs PAK: 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட்இண்டீஸ்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

Written by - Shiva Murugesan | Last Updated : May 31, 2019, 06:39 PM IST
WI vs PAK: 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட்இண்டீஸ் title=

18:31 31-05-2019
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி ஏழு விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

 


17:01 31-05-2019

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து அவுட் ஆனதால் 21.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அடுத்து மேற்கிந்திய தீவுகள் ஆட உள்ளது.

 


14:46 31-05-2019
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி முதலின் பேட்டிங் செய்ய உள்ளது.

 


டெல்லி/இங்கிலாந்து: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோத உள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும்.

2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வரும் மே 30 ஆம் தேதி துவங்கி ஜூன் 14 வரை என மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என 12 நகரங்களில் நடக்கிறது. 

இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகள் நேரடியாக தொடரில் பங்கேற்றன. மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி சுற்று மூலம் தொடரில் நுழைந்தது.

நேற்று நடந்த முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியும் இங்கிலாந்து அணியும் மோதின. அதில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த நிலையில், இன்று நாட்டிங்காமில் நடைபெற உள்ள இரண்டாவது ஆட்டத்தில் சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஜாசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கு இந்திய தீவுகள் அணியும் மோத உள்ளன.

பாகிஸ்தானை பொருத்த வரை பயிற்ச்சி ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை தழுவியது. மேலும் கடந்த 10 ஒருநாள் போட்டியில் தோல்வியையே சந்தித்து உள்ளது. அதேவேளையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பொருத்த வரை அதிரடி ஆட்டக்காரர்களுக்கு பஞ்சம் இல்லை. அவர்களை பாகிஸ்தான் பவுலர்கள் கட்டுப்படுத்த தவறினால், அதிக அளவில் ரன்கள் குவிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

இரு அணிகளும் வெற்றியுடன் போட்டியை தொடங்க முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

வெஸ்ட்இண்டீஸ்: கிறிஸ் கெய்ல், இவின் லீவிஸ், ஷாய் ஹோப், ஹெட்மயர், டேரன் பிராவோ, ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஆந்த்ரே ரஸ்செல், ஆஷ்லே நர்ஸ், கெமார் ரோச், ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ் அல்லது ஷனோன் கேப்ரியல்.

பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அல்லது முகமது ஹபீஸ், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), இமாத் வாசிம் அல்லது சோயிப் மாலிக், ஆசிப் அலி, ஷதப்கான், முகமது அமிர், ஹசன் அலி, ஷகீன் அப்ரிடி.

Trending News