LIVE IND vs NZ நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நியூசிலாந்து வீரர்கள்!!

இன்றைய நாக்-அவுட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 9, 2019, 04:09 PM IST
LIVE IND vs NZ நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நியூசிலாந்து வீரர்கள்!! title=

15:21 09-07-2019
3.3 ஓவரில் நியூசிலாந்து மார்ட்டின் குப்டில் 1 ரன் எடுத்த நிலையில், இந்திய வேக பந்து வீச்சாளர் பும்ராவிடம் சரணடைந்தார்.

 


14:42 09-07-2019
11பேர் கொண்ட இந்திய அணியில் விளையாடும் வீரர்களின் விவரம். ஜடேஜாவுக்கு வாய்ப்பு. ஷமி இடம் பெற வில்லை.

 


14:40 09-07-2019
இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றது. இதனைதொடர்ந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி இன்னும் சற்று நேரத்தில் பந்து வீச உள்ளது.

 


மான்செஸ்டர்: இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவிருக்கும் முதல் அரையிறுதி போட்டியில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியும், நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றது. இந்த போட்டி பிற்பகல் 3 மணிக்கு மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மே 30 ஆம் தேதி துவங்கி ஜூன் 14 வரை என மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 12 நகரங்களில் நடக்கிறது. இந்த தொடரில் இதுவரை 45 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இன்று முதல் அரையிறுதி போட்டிகள் தொடங்கயுள்ளது.

1992 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளுக்கு பின்னர், இந்த 2019 உலக கோப்பை போட்டி தொடர் தான் ராபின் ரவுண்ட் அடிப்படையில் போட்டிகள் நடந்தன. அதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து என நான்கு அணிகள் அரை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி 1-ல் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதுகின்றன. அதேபோல அரையிறுதி 2-ல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மோதுகின்றன. மற்ற அணிகளான ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கு இந்திய தீவுகள், பாகிஸ்தான் மற்றும் வங்களா தேசம் அணிகள் தொடரைவிட்டு வெளியேறிவிட்டன.

லீக் சுற்றில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டதால், இந்த இரு அணிகளும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் மோதுவது இதுவே முதன்முறை என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும். 

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷாப் பண்ட், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா

நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்டின் குப்தில், கொலின் முன்ரோ / ஹென்றி நிக்கோல்ஸ், ரோஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், ட்ரெண்ட் போல்ட், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன்

Trending News