இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 8 விக்கெட்டுக்கள் அள்ளினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 276 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஜடேஜா 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்தியாவை விடை 87 ரன்கள் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றிருந்தது.
தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அபிநவ் முகுந்த், லோகேஷ் ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும்
ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார்கள். ராகுல் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஓ'கீபே பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி(15), ஜடேஜா (2) ஆகியோரை ஹசில்வுட் அடுத்தடுத்து வெளியேற்றினார். பிறகு வந்த ரகானே, புஜாராவுடன் சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரகானே 52 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய கருண் நாயர் முதல் பந்தில் போல்ட் ஆனார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய புஜாரா 92 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்கள் எடுக்க இந்தியா 274 ரன்களுக்கு ஆட்டம் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஹசில்வுட் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
இந்தியா 10 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் சேர்த்திருகிறது. ஆஸ்திரேலியா வெற்றி பெற 188 ரன்கள் தேவை.
Innings Break! India all out for 274, lead Australia (276) by 187 runs #INDvAUS pic.twitter.com/ivJThsIjnp
— BCCI (@BCCI) March 7, 2017
97.1: WICKET! I Sharma (6) is out, c Shaun Marsh b Steve O'Keefe, 274 all out
— BCCI (@BCCI) March 7, 2017