உலகக்கோப்பை தோல்விக்கு பின், கையோடு இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களை இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன.
இந்தியா - நியூசிலாந்து இவ்விரு அணிகளும் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளிடம் உதைவாங்கி வெளியேறியிருந்தது. இந்த தொடருக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ’பவர்பிளே கிங்’ புவனேஷ்வர் குமாருக்காக காத்திருக்கும் மற்றொரு ரெக்கார்டு
டி20 அணியை ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் அணியை ஷிகர் தவானும் தலைமை தாங்க உள்ளனர். இந்த தொடரை அமேசான் பிரைம் ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இந்நிலையில், முதல் டி20 போட்டி இன்று வெல்லிங்டனில் இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு நடைபெற இருந்தது. மழை ஏற்கெனவே அங்கு அதிகம் பெய்துவந்ததால், போட்டி நடைபெற வாய்ப்பு குறைவு என முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், டாஸ் போடும் 11.30 மணிக்கு மழை தொடர்ந்ததால், டாஸ் போடும் நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டது.
UPDATE from Wellington
Both captains shake hands as the first #NZvIND T20I is called off due to persistent rain.#TeamIndia pic.twitter.com/MxqEvzw3OD
— BCCI (@BCCI) November 18, 2022
தொடர்ந்து மழை பெய்து வந்ததால், சற்றுநேரம் ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் நேரம் கடந்துவிட்டதால், மழை நின்றால் மட்டும் இந்திய நேரப்படி 2.15 மணிக்கு இரு அணிக்கும் தலா 5 ஓவர்கள் என்ற கணக்கில் போட்டி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், மழை விடாததாலும், தொடர் மழை இருக்கும் என்ற கணிக்கப்பட்டதாலும் மதியம் 1.30 மணிக்கே ஆட்டம் முழுவதுமாக கைவிடப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்துள்ளனர்.
#TeamIndia and New Zealand team enjoy a game of footvolley as we wait for the rain to let up.#NZvIND pic.twitter.com/8yjyJ3fTGJ
— BCCI (@BCCI) November 18, 2022
இந்த போட்டிக்கு எவ்வித புள்ளிகளும் வழங்கப்படாது. தொடர் மழையால், போட்டியை மைதானத்தில் காணவந்த ரசிகர்களும், உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய - நியூசிலாந்து போட்டியை காண காத்திருந்தவர்களுக்கும் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு நடுவே, போட்டி தொடங்குவதற்கு காத்திருந்த இருநாட்டு வீரர்கள் கிரிக்கெட்டை ஓரங்கட்டிவிட்டு வேறு விளையாட்டை விளையாடினர். சேர்களை நடுவே அடுக்கிவைத்து விட்டு, இருநாட்டு வீரர்கள் எதிரே எதிரே நின்று கொண்டு கால்களால் வாலிபால் விளையாடி நேரத்தை போக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு தரப்பு அணியில் சஹால், , சஞ்சு சாம்சன், இஷ் சோதி ஆகியோரும், மற்றொரு அணி தரப்பில் டிம் சௌதி, மைக்கெல் பிரேஸ்வெல், நியூசிலாந்து பிசியோ டாமி சிம்சேக் ஆகியோரும் விளையாடினர்.
முதல் போட்டி இன்று ரத்தான நிலையில், இரண்டாவது டி20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழை (நவ. 20) மௌண்ட் மங்கலாயின் பே ஓவல் மைதானத்தில் நடைபெறும். மூன்றாவது போட்டி நவ. 22ஆம் தேதி நடைபெற உள்ளது. அடுத்து, நவ. 25, 27, 29ஆம் தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ