Yashasvi Jaiswal vs Annabel Sutherland: இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், பிப்ரவரி 2024 மாதத்துக்கான ஐசிசி ஆடவர் அணியின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர்களின் ஆடவருக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. அதில் 22 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால், நியூசிலாந்தின் மூத்த வீரர் கேன் வில்லியம்சன் மற்றும் இலங்கை தொடக்க ஆட்டக்காரர் பாத்தும் நிசாங்கா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இறுதியாக பிப்ரவரி மதத்தில் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அறிவிக்கப்பட்டது.
பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது பெற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால்
சமீபத்தில் முடிவடைந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிக ரன்கள் குவித்தவர். அவர் ஒன்பது இன்னிங்ஸில் 89 சராசரியுடன் 712 ரன்கள் எடுத்தார். இரண்டு இரட்டை சதங்கள் மற்றும் மூன்று அரை சதங்கள் அதில் அடங்கும். இதுவரை ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் 68.53 சராசரியில் 1,028 ரன்கள் எடுத்துள்ளார், அதில் மூன்று சதங்கள் மற்றும் நான்கு அரைசதங்கள் அடித்துள்ளார்.
பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் டெஸ்ட் இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் வினோத் காம்ப்லி மற்றும் விராட் கோலிக்கு பிறகு இந்த சாதனையை படைத்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். அதேபோல ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் அதிக ரன்கள் அடித்ததில் முன்னணியில் உள்ளார்.
Australia's star all-rounder wins the ICC Women's Player of the Month award following an outstanding record-breaking performance in February
Read on
— ICC (@ICC) March 12, 2024
மேலும் படிக்க - IPL 2024: சிஎஸ்கே, மும்பை இல்லை... இந்த அணிதான் மிக பலமானது - பெஸ்ட் பிளேயிங் 11
மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால்
22 வயது மற்றும் 49 நாட்களில் தொடர்ச்சியாக இரட்டை சதங்களுடன், மும்பை கிரிக்கெட் வீரர் சர் டொனால்ட் பிராட்மேன் மற்றும் காம்ப்ளிக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு இரட்டை சதங்களை அடித்த மூன்றாவது இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். சவுத்பாவ் விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் 209 ரன்களும், ராஜ்கோட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் 214* ரன்களும் அடித்தார்.
டெஸ்ட் தொடரில் "தொடர் நாயகன்" விருது பெற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற பின்னடைவில் இருந்து, வலுவாக மீண்டு வந்து தொடரில் முன்னிலை பெற்று இறுதியில் 4-1 எனத் தொடரை கைப்பற்றியதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பங்கு முக்கியமானது.
ராஜ்கோட்டி நடந்த டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த போது, ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் (12) அடித்த வாசிம் அக்ரமின் சாதனையையும் சமன் செய்தார். பிப்ரவரியில் மூன்று டெஸ்டில் விளையாடிய இவர், 112 சராசரியில் 560 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Presenting the ICC Player of the Month for February
Congratulations, Yashasvi Jaiswal
Hear from the #TeamIndia batter on receiving the award@ybj_19 pic.twitter.com/tl1tJepdFJ
— BCCI (@BCCI) March 12, 2024
மேலும் படிக்க - டெஸ்ட் போட்டி விளையாடினால் ரூ. 45 லட்சம் சம்பளம்! பிசிசிஐ அதிரடி உத்தரவு!
சிறந்த வீரராக தேர்வானது குறித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் என்ன சொன்னார்?
பிப்ரவரி 2024 மாதத்திற்கான ஐசிசி அடவரி அணியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டது குறித்து பேசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், "இந்த ஐசிசி விருதை வெல்வதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், எதிர்காலத்திலும் இதுபோன்ற பல விருதுகளைப் பெற விரும்புவதாகவும் கூறினார். இது எனது முதல் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர். நான் விளையாடிய விதம் மற்றும் அணியின் பங்கு நாங்கள் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றோம். இது எங்கள் அனைவருக்கும் ஒரு நம்பமுடியாத அனுபவமாக இருந்தது. நான் அதை மிகவும் ரசித்தேன்" என்று அவர் கூறினார்.
பிப்ரவரி 2024 மாதத்திற்கான சிறந்த மகளிர் வீராங்கனை யார்?
அதேபோல பிப்ரவரி 2024 மாதத்திற்கான மகளிர் வீராங்கனைகளுக்கான ஐசிசி பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட், ஐக்கிய அரபு அமீரக அணியின் வீராங்கனைகளான கவிஷா எகொடகே மற்றும் ஈஷா ஓசா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதில் அனபெல் சதர்லேண்ட் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.
சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகளைத் கௌரவிக்கும் ஐசிசி
ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து சிறப்பு விருதுகளை வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கௌரவித்து வருகிறது. அந்த வரிசையில் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பை ஐசிசி வெளியிட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ