நியூசிலாந்து-க்கு எதிரான தொடர்; இந்திய வீரர் பட்டியல் வெளியானது!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் பட்டியலினை BCCI வெளியிட்டுள்ளது!

Last Updated : Dec 24, 2018, 05:44 PM IST
நியூசிலாந்து-க்கு எதிரான தொடர்; இந்திய வீரர் பட்டியல் வெளியானது! title=

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் பட்டியலினை BCCI வெளியிட்டுள்ளது!

ஆஸ்திரேலியா-விற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா தற்போது விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டி முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 

இந்நிலையில் வரும் ஜனவரி 12-ஆம் நாள் முதல் துவங்கும் ஒருநாள் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியலினை BCCI வெளியிட்டுள்ளது.

16 பேர் கொண்ட இப்பட்டியலில், ஒருநாள் தொடரின் கேப்டனாக விராட் கோலி செயல்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அணி விவரம்: விராட் கோலி, ரோகித் ஷர்மா, KL ராகுல், ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், MS டோனி, ஹார்திக் பாண்டையா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஜாஸ்பரிட் பூம்ரா, கலீல் அகமது, மொகமது ஷமி.

இதே அணி வரும் ஜனவரி 23 நாள் துவங்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடர் ஜன 23 துவங்கி பிப் 3., வரை நடைபெறுகிறது. இதனையடுத்து டி20 தொடர் ஆனது பிப் 06 துவங்கி பிப்., 10-வரை நடைபெறுகிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் அணியினையும் BCCI வெளியிட்டுள்ளது.

அணி விவரம்: விராட் கோலி, ரோகித் ஷர்மா, KL ராகுல், ஷிகர் தவான், ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், MS தோனி, ஹார்திக் பாண்டையா, குர்ணல் பாண்டையா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஜாஸ்ப்ரீட் குமார், கலீல் அகமது.

Trending News