INDvsAUS: இன்று ஹைதராபாத்தில் முதல் ஒருநாள் போட்டி - வெல்லப்போவது யார்?

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 2, 2019, 12:52 PM IST
INDvsAUS: இன்று ஹைதராபாத்தில் முதல் ஒருநாள் போட்டி - வெல்லப்போவது யார்? title=

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-௦ என்ற கணக்கி வென்றது. 

தற்போது இருஅணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 13 ஆம் தேதி வரை நடைபெறும். 

இன்று (மார்ச் 2) இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

 

20 ஓவர் தொடரை இழந்துள்ள நிலையில், ஒருநாள் போட்டியை வெற்றியுடன் இந்தியா அணி ஆரம்பிக்க வேண்டும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Trending News