இந்தியா- ஆசி,. 3-வது ஒருநாள் இன்று!

Last Updated : Sep 24, 2017, 09:51 AM IST
இந்தியா- ஆசி,. 3-வது ஒருநாள் இன்று! title=

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தோரில் நடைபெறவுள்ளது.

முன்னதாக நடைப்பெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய தோல்வியடைந்த நிலையில் இன்று நடைபேற உள்ள போட்டியில் இந்தியா வெற்றி பெரும் பட்சத்தில் தொடரைக் கைப்பற்றும். எனவே ஆஸ்திரேலியாவிற்கு இன்றைய போட்டி முக்கியமான போட்டியாகும்.

இந்திய அணி தரப்பில் தவான் இல்லாத போதிலும் அணியின் பலத்திற்கு பஞ்சம் இல்லை. ஆனால் ஆசி தரப்பில் ஆரோன் பிஞ்ச், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹாஸ்லேவுட் இல்லாதது சற்று பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இன்றைய போட்டியின் சில தகவல்கள்:-

நேரடி ஒளிபரப்பு(இனையத்தில்):

இந்த போட்டியில் Hotstar.com -இல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

நேரடி ஒளிபரப்பு(தொலைக்காட்சி):

நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பார்கலாம்.

போட்டியின் நேரம்:

போட்டி மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்கும். டாஸ் மதியம் 1 மணியளவில்.

Trending News