இங்கிலாந்து - இந்தியா 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்!!

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் டிரா ஆனது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

Last Updated : Nov 26, 2016, 09:25 AM IST
இங்கிலாந்து - இந்தியா 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்!!  title=

மொகாலி: இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் டிரா ஆனது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று தொடங்குகிறது. கேப்டன் விராட் கோலி (337 ரன்), புஜாரா (2 சதத்துடன் 262 ரன்), முரளிவிஜய் (180 ரன்) ஆகியோர் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அஸ்வின் (11 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா(6 விக்கெட்) ஆகியோரையே இந்திய அணி எடுத்துள்ளது. 

இந்தியா அணி: லோகேஷ் ராகுல், எம்.விஜய், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, அஸ்வின், பார்த்தீவ் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ் அல்லது புவனேஷ்வர்குமார்.

இங்கிலாந்து அணி: அலஸ்டயர் குக் (கேப்டன்), ஹசீப் ஹமீத், ஜோ ரூட், மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், காரெத் பேட்டி, ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கும். 

Trending News