இந்திய அணி 7 விக்கெட்டெக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு கான்பூரில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் டெஸ் பீல்டிங் தேர்வு செய்தார். இதனால் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது.
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டெக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய சார்பில் அதிகபட்சமாக டோனி 36 ரன்களும், சுரேஷ் ரெய்னா 34 ரன்களும் எடுத்தன.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள டோனியின் முடிவை மதிப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியை ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் வழிநடத்திச் செல்லும் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் டோனி விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை இபிசிசிஐ தரப்பில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், டோனியின் முடிவை மதிப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்:-
இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் டோனி தற்போது விலகி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியை ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் வழிநடத்திச் செல்லும் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் டோனி விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது திடீர் முடிவு இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக டோனி பிசிசிஐ இடம் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளார். பிசிசிஐ தரப்பில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் டிரா ஆனது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. மொகாலியில் நடந்த 3-வது டெஸ்டிலும் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் டிரா ஆனது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 537 ரன் குவித்தது. ஜடேஜா 3 விக்கெட் கைப்பற்றினார்.
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 159.3 ஓவர்களில் 537 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 128, ஜோ ரூட் 124, மொயீன் அலி 117 ரன்கள் குவித்தனர். இந்தியத் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்து பெரிய ஸ்கோரை எடுத்து விட்டது. பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸ்சை விளையாடியது. தொடக்க வீரர்கள் முரளி விஜய், கவுதம் காம்பீர் நிதானமாக ஆடினர். 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 23 ஓவரில் 63 ரன் எடுத்து இருந்தது.
இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 311 ரன் குவித்துள்ளது. ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். ராஜ்கோட் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேடிங் செய்தது.
இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 311 ரன் குவித்துள்ளது. ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். ராஜ்கோட் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேடிங் செய்தது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. ராஜ்கோட் மைதானத்தில் டெஸ்ட் போட்டி அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் மற்றும் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது. தொடக்க வீரராக 19 வயது ஹசீப் ஹமீத் அறிமுகமாக உள்ளதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.