India Vs South Africa 3rd ODI: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று மதியம் தலைநகரம் டெல்லியில் நடைபெறவுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் மிதமான மழை பெய்து வண்ணம் இருந்தது. இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாகும். ஏனென்றால் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா தலா ஒரு வெற்றி பெற்று தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் வெற்றி பெரும் அணி தொடரை வென்று கோப்பையை கைப்பற்றும். ஆனால் இன்றைய போட்டி நடைபெறுமா என்பதில் சிக்கல் உள்ளது. டெல்லியின் வானிலையைப் பார்க்கும்போது மழையால் இந்தப் போட்டி தடைப்படலாம் எனத் தெரிகிறது. வாருங்கள் டெல்லியின் வானிலை குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
டெல்லியில் மழை பெய்யுமா? வானிலை அறிவிப்பு
டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மூன்றாவது ஒருநாள் போட்டியை முழுமையாக நடைபெறாது என்ற யூகங்கள் எழுந்துள்ளன. டெல்லியில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல இன்றைய நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் மற்றும் சூரிய ஒளியின் வெளிச்சம் மிகக் குறைவாக இருக்கும்.
மேலும் படிக்க: இதுலாம் நமக்கு தேவையா? ரன் அவுட்க்கு ஆசைபட்டு பல்பு வாங்கிய சிராஜ்!
டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) 40 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வானிலை இணையதளமான Accuweather இன் படி, இன்று டெல்லியில் வானம் மேகமூட்டத்துடன் காண 61 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், மேலும் காற்றின் வேகமும் மணிக்கு 20 கி.மீ. இருக்கும் எனக் கூறியுள்ளது.
அருண் ஜெட்லி மைதானத்தின் விவரம்:
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இதுவரை 26 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இவற்றில் இரண்டு போட்டிகளில் மட்டுமே 300 ரன்களுக்கு மேல் அடித்துள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் ஓரளவு ஆதிக்கம் செலுத்தலாம் எனத் தரவுகள் கூறுகிறது. இங்கு கடந்த மூன்று போட்டிகளில், முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 259 ஆக இருந்தது. பின்னர் பேட்டிங் செய்த அந்த அணி கடைசி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
மேலும் படிக்க: Video: வெறுங்கையிலயா டாஸ் போட... காசை கொடுங்கப்பா - ஷிகர் தவானின் கலகல சம்பவம்
இந்திய அணியில் ஆடும் சாத்தியமான 11 வீரர்களின் விவரம்:
ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மான் கில், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், ஷாபாஸ் அகமது.
தென்னாப்பிரிக்கா அணியில் ஆடும் சாத்தியமான 11 வீரர்களின் விவரம்:
டெம்பா பவுமா (கேப்டன்), ஜென்மன் மலான், குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம், ஹென்ரிக் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, என்ரிக் நார்ட்ஜே.
மேலும் படிக்க: கோடிக்கணக்கில் ஐபிஎல் சம்பளம்! ஆனாலும் உலக கோப்பையில் இடம் இல்லை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ