மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடினமான வெற்றியைத் தொடர்ந்து, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மிக முக்கியமான வெற்றியுடன் அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இப்போது ஒரு படி முன்னேறி உள்ளது. அந்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) உடன் 15 புள்ளிகளில் சமநிலையில் இருந்தாலும், சிறந்த ரன் விகிதத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
மும்பைக்கு வாய்ப்பு இருக்கிறதா?
அதேபோல், LSG-ன் வெற்றி MI-க்கு ஒரு மோசமான செய்தியாக மாறியுள்ளது. இப்போது மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை வீழ்த்த வேண்டும். அப்படி செய்தாலும் தற்போது இருக்கும் மிக மோசமான நிகர ரன் ரேட் காரணமாக மற்ற அணிகளின் முடிவுகளை சார்ந்திருக்க வேண்டும். இதனால் அவர்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகள் தங்களுக்கு இருக்கும் கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால், மும்பையின் பிளே ஆஃப் வாய்ப்பு என்பது இல்லாமல் போய்விடும்.
மேலும் படிக்க | IPL 2023: மிகவும் மோசமாக சொதப்பிய ஐபிஎல் 2023 பேட்டர்கள்
சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பு
இருப்பினும், எல்எஸ்ஜியின் வெற்றி பிளேஆஃப் பந்தயத்தில் உள்ள மற்ற அனைத்து அணிகளுக்கும் ஒரு நல்ல செய்தி. டெல்லி கேப்பிட்டல்ஸ் (டிசி) அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். குவாலிஃபையர் ஒன்றில் குஜராத் அணிக்கு எதிராக விளையாட வேண்டும் என்றால், எல்எஸ்ஜி மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளின் முடிவு பொறுத்து தான் கூற முடியும்.
ராஜஸ்தான் - கேகேஆர் அணிகள்
ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது. இரண்டு அணிகளும் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்று 14 புள்ளிகளைப் பெற்று, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி SRH-க்கு எதிரான கடைசி ஆட்டத்தில் தோல்வியடைந்தால், இரு அணிகளும் நிகர ரன் ரேட்டில் MI க்கு மேல் நிலைக்கு வருவார்கள். அப்போது ஒரு வாய்ப்பு இருக்கிறது.
ஆர்சிபி - பஞ்சாப் அணிகளுக்கான வாய்ப்பு
மிக குறைந்த அளவில், RCB மற்றும் PBKS இரண்டு அணிகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இரு அணிகளுக்கும் நிகர ரன்ரேட் காரணமாக நல்ல வாய்ப்பு உள்ளது. மும்பை இந்தியன்ஸ், எல்எஸ்ஜி மற்றும் சிஎஸ்கே அணிகள் கடைசி போட்டியில் தோல்வியை தழுவி, இரு அணிகளும் எஞ்சியிருக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ