IND vs NZ: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கடைசி நேரத்தில் வரப்போகும் மாற்றம்! இந்த வீரர் சந்தேகம் தான்

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில் பிளேயிங் லெவனில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை விளையாடிய போட்டிகளில் பெரிய அளவிலான மாற்றத்தை கேப்டன் ரோகித் சர்மா செய்யவில்லை.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 22, 2023, 10:09 AM IST
  • இந்தியா - நியூசிலாந்து மோதல்
  • பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றம்
  • முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா?
IND vs NZ: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கடைசி நேரத்தில் வரப்போகும் மாற்றம்! இந்த வீரர் சந்தேகம் தான் title=

உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை தர்மசாலாவில் எதிர்கொள்கிறது. இரு அணிகளும் இதுவரை விளையாடிய நான்கு லீக் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. இந்திய அணியைப் போலவே நியூசிலாந்து அணியும் பேட்டிங், பீல்டிங் மற்றும் பந்துவீச்சில் டாப் கிளாஸில் இருக்கிறது. இதனால் இந்த இரு அணிகள் மோதும் லீக் போட்டியை அரையிறுதி போட்டிக்கு இணையாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் பிளேயிங் லெவனை பொறுத்தவரை முதன்முறையாக இரண்டு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | SA vs ENG: ஹென்றி கிளாசன் - யான்சென் சரவெடி! அரண்டுபோன இங்கிலாந்து - தெ.,ஆப்பிரிக்கா அதிரடி

இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் கேப்டன் ரோகித் சர்மா பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யவில்லை. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அணியில் இருந்து முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்த சுப்மான் கில்லுக்கு பதிலாக இஷான் கிஷன் விளையாடினார். கில் திரும்பியதும், இஷான் கிஷன் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியுள்ளார். காயம் பெரிய அளவில் இல்லை என்றாலும், அடுத்தடுத்த போட்டிகளை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு யாரை அணியில் சேர்ப்பது என்பது கேப்டன் ரோகித் சர்மாவின் கையில் இருக்கிறது.

இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இருக்கின்றனர். இதில் ஹர்திக் வேகப்பந்து வீசுவார் என்பதால் ஏற்கனவே அணியில் இருக்கும் ஷர்துல் தாக்கூரை நீக்கிவிட்டு முகமது ஷமியை பிளேயிங் லெவனில் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மைதானத்தின் நிலையைப் பொறுத்து அந்த இடத்துக்கு அஸ்வின் கொண்டுவரப்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை ஷர்துல் தாக்கூர் நீக்கப்படவில்லை என்றால் ஒரே ஒரு பேட்ஸ்மேனை மட்டும் பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது. அந்தவகையில் பார்க்கும்போது சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

மேலும் படிக்க | SL vs NED: இலங்கையின் மோசமான பவுலிங் - 6 விக்கெட்டுக்கு பிறகு கெத்து காட்டிய நெதர்லாந்து..!

தர்மசாலா மைதானம் மற்றும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு படையை கருத்தில் கொண்டு இருவரில் யாரேனும் ஒருவர் அணிக்குள் வர வாய்ப்பிருக்கிறது. சூர்யகுமார் யாதவ் நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதால் முன்கூட்டியே பயிற்சியை முடித்துக் கொண்டு கிளம்பினார். ஒருவேளை காயம் பெரியளவில் இல்லையென்றால் அவர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அவர் விளையாட முடியாதபட்சத்தில் இஷான் கிஷன் பிளேயிங் லெவனில் விளையாடுவார். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News