மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் இரண்டாவது டி20 போட்டி கேரளாவின் திருவணந்தபுரத்தில் நடைப்பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. முதலாவதாக பேட்டிங் செய்த இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக சிவம் தூபே 54(30) ரன்கள் குவித்தார், இவருக்கு துணையாக ரிஷாப் பன்ட் 33(22) குவித்தார். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் கெஷிரிக் வில்லியம், ஹெடன் வால்ஷ் தலா இரண்டு விக்கெட் குவித்தனர்.
இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர் லென்டில் சிம்மன்ஸ் அதிரடியாக விளையாடி 67(45) ரன்கள் குவித்தார், இவருக்கு துணையாக இவின் லிவிஸ் 40(35) ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். ஆட்டத்தின் 18.3-வது பந்தில் வெற்றி இலக்கை எட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரினை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
ஆட்ட நாயகனாக விருது லென்டில் சிம்மன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் எதிரான மூன்றாவது டி20 போட்டி வரும் டிசம்பர் 11-ஆம் தேதி மும்பை மைதானத்தில் நடைப்பெற உள்ளது.