இந்த தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் கேப்டனாக MS தோனி தேர்வு!

உலகக் கோப்பை வென்ற இந்திய சூப்பர் ஸ்டார் MS தோனி, Cricket Australia தொகுத்த தசாப்தத்தின் ஒருநாள் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்!

Last Updated : Dec 24, 2019, 02:10 PM IST
இந்த தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் கேப்டனாக MS தோனி தேர்வு! title=

உலகக் கோப்பை வென்ற இந்திய சூப்பர் ஸ்டார் MS தோனி, Cricket Australia தொகுத்த தசாப்தத்தின் ஒருநாள் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்!

இந்த அணியில் தோனியை தவிர 3 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். 2011-ல் உலகக் கோப்பை மகிமைக்கு இந்தியாவை வழிநடத்திய MS தோனி, CricketAustralia-வின் ஒருநாள் அணியில் விக்கெட் கீப்பிங் கடமைகளையும் கையாளுகிறார்.

MS தோனியைத் தவிர, இந்திய கேப்டன் விராட் கோலி, தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ஆகியோரும் இந்த தசாப்தத்தின் அணியில் இடம் பெறுகின்றனர். குறித்த இந்த CricketAustralia அணியில் ஹாஷிம் அம்லாவுடன் ரோஹித் துவக்க ஆட்டக்காரர்களாய் குறிக்கப்பட்டுள்ளனர். வழக்கம் போல் கோலி 3-வது இடத்தில் களமிறங்குகிறார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கான ஆண்டின் ஒருநாள் அணியை தொகுத்த பத்திரிகையாளர் மார்ட்டின் ஸ்மித், இந்தியாவின் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டின் "பொற்காலத்தில்" MS தோனி ஒரு மேலாதிக்க சக்தியாக இருந்தார் என்று கூறியுள்ளார். மேலும், மார்ட்டின் ஸ்மித் விராட் கோலியை தசாப்தத்தின் "சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • Cricket Australia தொகுத்த தசாப்தத்தின் ஒருநாள் அணி

MS தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, ஹாஷிம் அம்லா, விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், ஷாகிப் அல் ஹசன், ஜோஸ் பட்லர், ரஷீத் கான், மிட்செல் ஸ்டார்க், ட்ரெண்ட் போல்ட், லசித் மலிங்கா.

இதற்கிடையில், CricketAustralia-ன் டெஸ்ட் அணியில் தசாப்தத்தில் இடம் பெற்ற ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. அணியின் கேப்டனாகவும் இந்திய கேப்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுவாரஸ்யமாக, ஏபி டிவில்லியர்ஸ் அணியின் விக்கெட் கீப்பராகவும், அலெஸ்டர் குக், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்குப் பிறகு விராட் கோலியின் பேட்டிங் நிலை 5-வது இடத்திலும் உள்ளது.

  • கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தசாப்தத்தின் டெஸ்ட் அணி: 

விராட் கோலி (கேப்டன்), அலெஸ்டர் குக், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஆப் டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், டேல் ஸ்டெய்ன், ஸ்டூவர்ட் பிராட், நாதன் லியோன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Trending News