ஒலிம்பிக்: காலிறுதியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் படுகாயம்.

Last Updated : Aug 17, 2016, 09:31 PM IST
ஒலிம்பிக்: காலிறுதியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் படுகாயம். title=

ரியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான மல்யுத்த கால் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை வீனேஷ் போகத் மற்றும் சீன வீரங்கனை சுன் யானன் ஆகியோர் மோதினர். 

இதற்கிடையில் ‛‛ரவுண்ட்-16'' போட்டியில் வினேஷ் வலது காலில் அடிபட்டிருந்தது. வலியுடனேயே காலிறுதி போட்டியில் விளையாட துவங்கினார். இந்நிலையில்  காலிறுதி போட்டியின் போது சீன வீராங்கனை முன்னனியில் இருந்து வந்தார். கடைசி சுற்று பரபரப்பாக நடந்து கொண்டிருந்தபோது சீன விராங்கனை வினேஷின் வலது காலை பிடித்து மடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலில் பலத்த முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் எழுந்து நிற்ககூட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 

அவர் ஆடுகளத்தில் வலியால் கதறியது ஆனைவரையும் சோகமயமாக்கியது. காயம் காரணமாக வினேஷ் போகத் போட்டியில்இருந்து விலகினார். இதையடுத்து சீன விராங்கனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். தற்போது வினேஷ் போகத் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

Trending News