அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடைபெற்று வரும் இந்த ஆண்டுக்கான உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
2017-ம் ஆண்டுக்கான உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு கலந்துக்கொண்டார். அவர் 48 கிலோ எடை பிரிவில் இறுதிச்சுற்றில் கலந்து கொண்டு , 85 கிலோ(ஸ்னாட்) மற்றும் 109 கிலோ(கிளீன்&ஜெர்க்) எடை பிரிவில் மொத்தம் 194 கிலோ தூக்கி சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் இந்த சாதனையை படைக்கும் இரண்டாவது இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார் மீராபாய் சானு. உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலாவது தங்கம் வென்ற இந்திய பெண் கர்ணம் மல்லேஸ்வரி ஆவார்.
IWF WWC 2017 Women's 48kg:
Chanu Mirabai | 194
Thunya Sukcharoen | 193
Ana Segura | 182#2017iwfwwc pic.twitter.com/soupO70zyI— IWF (@iwfnet) November 30, 2017