TNPL 2021: 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது திருச்சி

சேலம் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 2, 2021, 06:40 AM IST
TNPL 2021: 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது திருச்சி title=

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வருடம்தோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த லீக் போட்டி கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த லீக் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் தற்போது இந்தாண்டுக்கான தொடர் (TNPL 2021) தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்றைய போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் (Ruby Trichy Warriors) மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

ALSO READ | TNPL 2021: 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சியை வீழ்த்தியது திண்டுக்கல்

முதலில் பேட் செய்த சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்து இருந்தது. அதிகபட்சமாக முருகன் அஸ்வின் 21 ரன்கள் எடுத்தார். அக்சய் சீனிவாசன் 19 ரன்களும்,  அபிஷேக் 14 ரன்களும், கேப்டன் டேரில் பெராரியோ 14 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. அதன்படி துவக்க வீரர்கள் சந்தோஷ் ஷிவ் 6 ரன்கள், அமித் சாத்விக் 18 ராம்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். முகமது அத்னன் கான் 13 ரன்களிலும், நிதிஷ்  ராஜகோபால் 22 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின்னர் 5வது விக்கெட்டுக்கு இணைந்த ஆதித்ய கணேஷ் (28), அந்தோணி தாஸ் (24) கடைசி வரை நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதனால் 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

திருச்சி அணி கேப்டன் ரகில் ஷா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். திருச்சி அணி  இதுவரை 6 லீக் போட்டிகளில்  விளையாடி உள்ளது.  இதில் 4 வெற்றி, 2 தோல்வி என மொத்தம் 8 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ALSO READ | TNPL கிரிக்கெட் 2021: நெல்லையை வென்றது திருப்பூர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News