குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை விராட் மறுத்தார்! ஏன்?

Last Updated : Sep 15, 2017, 12:28 PM IST
குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை விராட் மறுத்தார்! ஏன்? title=

குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வேண்டாம் என்று மறுத்துள்ளார்.

விராட் கோலி பல்வேறு விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் அதிக வருமானம் ஈட்டி வருகிறார். ஆனால் தற்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள குளிர்பான விளம்பர ஒப்பந்தம் ஒன்றை அவர் மறுத்துள்ள விவகாரம் தெரிய வந்துள்ளது.

காற்றடைக்கப்பட்ட எந்த ஒரு குளிர் பானத்தையும் தான் அருந்துவதில்லை. எனவே தான் அருந்தாத ஒன்றை மற்றவர்களுக்கு விளம்பரம் செய்ய விரும்பவில்லை என்ற காரணத்தினால் இந்த வாய்ப்பை மருத்துள்ளதாக நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி தெரிவித்தார்.

Trending News