இலங்கையை சேர்ந்த பெண் கிரிக்கெட் வீரர் ஸ்ரீபாலி வீரக்கொடி (Sripali Weerakkody) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
"ஓய்வு பெறுவதற்கான முடிவு எனது தனிப்பட்ட முடிவு" என்று அவர் தெரிவித்தார்.
கொழும்பு (Coloumbo): இலங்கையின் பெண் கிரிக்கெட் வீரரான ஸ்ரீபாலி வீரக்கோடி புதன்கிழமை (ஜூலை 22, 2020) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
"நான் ஓய்வு பெற வேண்டும் என முடிவு செய்துள்ளேன், எனவே அதற்கு இது தான் சரியான நேரம் என்று உணர்கிறேன்" என்று ஸ்ரீபாலி தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியுள்ளதாகம் இலங்கை கிரிக்கெட் கவுன்சில் மேற்கோள் காட்டியது.
Sri Lanka woman cricketer Sripali Weerakkody retires from international crickethttps://t.co/RBezNfOYsY
— Zee News English (@ZeeNewsEnglish) July 22, 2020
"ஓய்வு பெறுவதற்கான முடிவு தனிப்பட்ட முடிவு" என்று அவர் தெளிவுபடுத்தினார்.
34 வயதான வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ஆன இவர் 89 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 58 T20 சர்வதேச போட்டிகளில், சர்வதேச அளவில் பங்கேற்றுள்ளார்.