ஆஸ்திரேலியாவை பந்தாடிய ஜிம்பாப்வே! வரலாற்று சாதனை!

Australia vs Zimbabwe: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 3, 2022, 12:58 PM IST
  • ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வே.
  • ஒருநாள் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
  • ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
ஆஸ்திரேலியாவை பந்தாடிய ஜிம்பாப்வே! வரலாற்று சாதனை! title=

லெக் ஸ்பின்னர் ரியான் பர்ல் 10 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற உதவினார்.  முதல் இரண்டு போட்டிகளில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேயை பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.  இரண்டு போட்டிகளிலும் 5 மற்றும் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் வென்றது.  மூன்றாவது போட்டியில் ஜிம்பாப்வே டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.  முதல் 10 ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை 141 ரன்களுக்கு சுருட்டியது.

 

ஜிம்பாப்வே அணி 66 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. சாகப்வா அதிகபட்சமாக 37 ரன்களும், தடிவானாஷே மருமணி 35 ரன்களும் சேர்த்து 142-7 என்ற வெற்றி இலக்கை எட்டினர்.  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே பெற்ற முதல் ஒருநாள் வெற்றி இதுவாகும்.  ஆஸ்திரேலியவில்  ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 96 பந்துகளில் 94 ரன்கள் அடித்தார்.  இதுவே ஆஸ்திரேலிய அணிக்கு மரியாதையான ஸ்கோரை எட்ட உதவியது. 

 

மேலும் படிக்க | மீண்டும் மோதிக்கொள்ளும் இந்தியா பாகிஸ்தான்! ஆசிய கோப்பையில் சுவாரஸ்யம்!

ஒன்பது ஓவர்களில் ஆஸ்திரேலியா 31-3 என்று சரிந்தது.  வார்னர் மட்டும் சிறப்பாக விளையாட 90களில் நான்காவது முறையாக ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியாவுடன் பெட்ரா வெற்றியை ஜிம்பாப்வே அணி கொண்டாடி வருகின்றனர்.  ஸ்திரேலியாவில் அக்டோபர் 16-ம் தேதி தொடங்கும் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இரு அணிகளும் தயாராகி வருகின்றன.

மேலும் படிக்க | ஆல்ரவுண்டர்கள் தரவரிசை - டாப் 5ல் ஹர்திக் பாண்டியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News