தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) கடந்த பிப்ரவரி 24-ம் தேதி இரவு 11 மணியளவில் துபாயில் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் மரணமடைந்தார்.
இது தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமா முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பலரும் அதற்கு இரங்கல்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, இவரின் மைத்துனர் மகள் சோனம் கபூரின் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. முன்னதாக, சோனம் கபூர் தன் நண்பர் ஆனந்த் அகுஜாவை நீண்ட நாளாக காதலித்து வந்தார்.
பின்னர், இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயகிக்கப்பட்டு, சமீப காலமாக இருவரின் புகைப்படங்களை அதிகமாக சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில், தொழிலதிபரான அகுஜாவுக்கும், சோனம்க்கு இன்று மெஹந்தி நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீதேவியின் வீடு விழா கோலம் பூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.