சித்திரை திருவிழா: நாளை முதல் வைகை அணையிலிருந்து நீர் திறப்பு

நாளை முதல் மதுரை சித்தரை திருவிழாவிற்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 26, 2018, 04:47 PM IST
சித்திரை திருவிழா: நாளை முதல் வைகை அணையிலிருந்து நீர் திறப்பு  title=

நாளை முதல் மதுரை சித்தரை திருவிழாவிற்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிகையில் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழா 26.4.2018 முதல் 4.5.2018 வரை நடைபெற உள்ளது. 

மேலும், 30.4.2018 ஆம் தேதி அன்று காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் அருள்மிகு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுவதால்,

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாளுக்கு முன்னர் தண்ணீர் வந்து சேரும் வகையில் வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கைகள் வந்துள்ளன. 

இதனை ஏற்று, எதிர்வரும் சித்திரைத் திருவிழாவில் அருள்மிகு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும்
வைபவத்திற்கு வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் 27.4.2018 முதல் 30.4.2018 வரை 216 மி.க.அடி தண்ணீரை திறந்துவிட நான் ஆணை இட்டு உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தமிழக முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Trending News