திருநங்கையை திருமணம் செய்த ரயில்வே ஊழியர்!

பெற்றோர் எதிர்ப்பை மீறி தூத்துக்குடியில் ரயில்வே ஒப்பந்த ஊழியர் திருநங்கையை திருமணம் செய்துகொண்டார். 

Last Updated : Nov 1, 2018, 10:27 AM IST
திருநங்கையை திருமணம் செய்த ரயில்வே ஊழியர்! title=

பெற்றோர் எதிர்ப்பை மீறி தூத்துக்குடியில் ரயில்வே ஒப்பந்த ஊழியர் திருநங்கையை திருமணம் செய்துகொண்டார். 

தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் அருண்குமார் (வயது 22). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ரயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.

தூத்துக்குடி-எட்டயபுரம் ரோட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீஜா. திருநங்கையான இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இந்த முடிவுக்கு அருண்குமார் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி ஸ்ரீஜாவை திருமணம் செய்ய அருண்குமார் முடிவு செய்தார்.

அதன்படி, நேற்று இவர்கள் இருவரும் தூத்துக்குடி சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். 

முன்னதாக மணமக்கள் கோவில் அலுவலகத்துக்கு சென்றபோது, இந்த திருமணத்தை நடத்த அனுமதிக்க முடியாது என்று அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திடீரென திருநங்கைகள் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸார் திருக்கோவில் அலுவலகத்திற்கு விரைந்தனர்.

அவர்கள் திருநங்கைகள் மற்றும் கோயில் அதிகாரிகளுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பகல் 11:45 மணியளவில் இருவரது திருமணமும் நடைபெற்றது

இந்த திருமனத்திருக்கு ஸ்ரீஜாவின் கல்லூரி தோழிகள், அருண்குமாரின் சில உறவினர்கள் மற்றும் நண்பர்களும், ஏராளமான திருநங்கைகளும் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

Trending News