சபாநாயகர் தனபாலை நீக்க வேண்டும்: நடிகர் கருணாஸ் எம்எல்ஏ கடிதம்

கடந்த சில தினங்களாக பரபரப்பை ஏற்ப்படுத்திய வந்த நடிகர் கருணாஸ் எம்எல்ஏ, இன்று மேலும் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 3, 2018, 02:19 PM IST
சபாநாயகர் தனபாலை நீக்க வேண்டும்: நடிகர் கருணாஸ் எம்எல்ஏ கடிதம் title=

கடந்த சில தினங்களாக பரபரப்பை ஏற்ப்படுத்திய வந்த நடிகர் கருணாஸ் எம்எல்ஏ, இன்று மேலும் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளார். 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், முதல்வர் மற்றும் காவல் துறை அதிகாரிகளை அவதூறாக பேசினார். இதனைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாங்கத்தில் அவர்மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த 23 ஆம் தேதி சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கருணாஸ் கைது செய்யப்பட்டு நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். 

இந்நிலையில், சட்டப்பேரவை செயலாளருக்கு நடிகர் கருணாஸ் எம்எல்ஏ கடிதம் எழுதி உள்ளார். அதில், தமிழக சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறார். இதனால் சபாநாயகர் தனபாலை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கடிதத்தில் கூறியுள்ளார்.

Trending News