தூத்துக்குடி துப்பாக்கிசூடு: பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் ஆறுதல்

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்திகடந்த 22-ம் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். மேலும் இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Updated: Jun 6, 2018, 09:15 AM IST
தூத்துக்குடி துப்பாக்கிசூடு: பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் ஆறுதல்
Courtesy: Twitter

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்திகடந்த 22-ம் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். மேலும் இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை தமிழக அரசு நியமித்து இதுகுறித்து விசாரணை தூத்துக்குயில் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினை நடிகர் விஜய் நேற்று நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவர் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதுடன், ரூ.1 லட்சம் நிதியுதவியும் அளித்துள்ளார்.