"தீயைத் தாண்டியவர்; தென்றலைத் தீண்டியவர்" கலைஞர் -விவேக்!

திமுக தலைவர் கருணாநிதி "தீயைத் தாண்டியவர்; தென்றலைத் தீண்டியவர்" என நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கதின் வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும் அவரது உடல்நலம்பெற பிராத்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Jul 29, 2018, 11:52 AM IST
"தீயைத் தாண்டியவர்; தென்றலைத் தீண்டியவர்" கலைஞர் -விவேக்!

திமுக தலைவர் கருணாநிதி "தீயைத் தாண்டியவர்; தென்றலைத் தீண்டியவர்" என நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கதின் வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும் அவரது உடல்நலம்பெற பிராத்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில நாட்களாக மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் நாள் இரவு அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி, ராஜாத்தி அம்மாள், கனிமொழி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தடைந்தனர். பின்னர் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தலைவர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

"எல்லோருடைய பிரார்த்தனைக்கும் இயற்கை செவி சாய்க்கட்டும்! இந்த நூற்றாண்டின் இணையற்ற பேச்சாளர் எழுத்தாளர் பாடலாசிரியர்,கவி, இலக்கியவாதி ராஜதந்திரி, கடும் உழைப்பாளி, பெரும் இயக்கத்தின் இதயம்! தீயைத் தாண்டியவர்; தென்றலைத் தீண்டியவர்!" என பதிவிட்டுள்ளார்!

More Stories

Trending News