நடிகர்களின் அரசியல் பிரவேசம் நாட்டிற்கு போரழிவு: பிரகாஷ்ராஜ்!

திரைப்பட நடிகர்களின் அரசியல் பிரவேசம் நாட்டிற்கு போரழிவு ஏற்படுத்தும் என நடிகர் பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்!

ANI | Updated: Nov 12, 2017, 02:53 PM IST
நடிகர்களின் அரசியல் பிரவேசம் நாட்டிற்கு போரழிவு: பிரகாஷ்ராஜ்!
Pic Courtesy: @ANI

திரைப்பட நடிகர்களின் அரசியல் பிரவேசம் நாட்டிற்கு போரழிவு ஏற்படுத்தும் என நடிகர் பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்!

சமீப காலமாக திரைத்துறையினர் பலரும், சமூக ஆர்வளர்களாக மாறி வருவதும், சமூக பிரச்சனைகளுக்கு குரள் கொடுத்து வருவதும் வழக்கமாகி வருகிறது. இந்த பட்டியலில் தற்போது இணைந்திருப்பவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.

சமீப காலமாக இவர் ட்விட்டர் வாயிலாகவும், ஊடகங்களின் வாயிலாகவும் சமூக பிரச்சனைகளுக்கு ஆதரவாக குரள் கொடுத்து வருகின்றார். இதனால் இவர் விரைவில் அரசியலுக்கு Entry கொடுக்க முயற்சிக்கின்றார் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று அவர் தெரிவித்துள்ள ஒரு கருத்து ஒன்று அனைவரது எதிர்பார்பையும் தகர்த்துள்ளது. 

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது; நடிகர்களின் அரசியல் பிரவேசம் நாட்டிற்கு போரழிவு ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார். நடிகர் கமல் மற்றம் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரவிருக்கும் நிலையில், பிரகாஷ்ராஜின் இக்கருக்கு அனைவருது கவணத்தையும் ஈர்த்துள்ளது!