சென்னை: தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிக்கு நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக (Bharatiya Janata Party) தனது நிலைபாட்டை அறிவித்துள்ளது. தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டர். இதனையடுத்து அதிமுகவுடன் சேர்ந்து திமுக கூட்டணியை தோற்கடிப்போம் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அதிமுகவை பொறுத்த வரை இரண்டு தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்யவேண்டும் என்ற நோக்கத்தில், தங்கள் கூட்டணியில் உள்ள பாஜக, பாமக (Pattali Makkal Katchi), தேமுதிக (Desiya Murpokku Dravida Kazhagam) போன்ற கட்சிகளிடம் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது.
அதன் ஒருபகுதியாக பாஜகவின் முன்னாள் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆதரவை கோரியுள்ளது ஆளும் கட்சி. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாஜகவின் முழு ஆதரவு உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெரும். அதேபோல திமுக கூட்டணியை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிப்போம் எனக் கூறினார்.
தமிழகத்தில் காலியாகவுள்ள நாங்குநேரி (Nanguneri), விக்கிரவாண்டி (Vikravandi), தொகுதிகளுக்கு இந்த மாதம் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் (By-Elections) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் கட்சி அதிமுக (All India Anna Dravida Munnetra Kazhagam), எதிர்கட்சி திமுக (Dravida Munnetra Kazhagam) மற்றும் நாம் தமிழர் கட்சி (Naam Tamilar Katchi) போன்றவை களம் காண்கிறார்கள். அமமுக (Amma Makkal Munnetra Kazhagam) மற்றும் மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) கட்சிகள் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட வில்லை என்று அறிவித்துள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக - திமுக இடையே நேரடி போட்டியாக இருக்கும், அதேபோல நாங்குநேரி தொகுதியில் அதிமுக - காங்கிரஸ் (Congress) இடையே நேரடி போட்டி நிலவ உள்ளது. இந்த வருட இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், இடைத்தேர்தலில் தங்கள் பலத்தை நிருப்பிக்க திமுக (Dravida Munnetra Kazhagam) மற்றும் அதிமுக (All India Anna Dravida Munnetra Kazhagam) பல வியூகங்களை வகுத்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 ஆம் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.