கோயமுத்தூர் பல்கலைக் பேராசியர் பணிக்காக சுரேஷ் என்பவரிடமிருந்து நேற்று துணைவேந்தர் கணபதி ஒரு லட்ச ரூபாயை ரொக்கமாகவும், ரூ.29 லட்சத்துக்கான செக் வாங்கும்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக துணைவேந்தர் கணபதி கைது செய்யபட்டுள்ளார்.
இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு துணைவேந்தர் கணபதியின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை செய்தனர். சோதனையின் போது ரூ 2000 நோட்டுக்கள் கழிவு நீர்த் தொட்டியில் கிழிந்த நிலையில் கிடப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் கழிவு நீர்த் தொட்டியில் ரூபாய் நோட்டுக்கள் யார் கிழித்து போட்டது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் துணைவேந்தர் கணபதியின் மனைவி சுவர்ணலதா ரூபாய் நோட்டுக்களைக் கிழித்துக் கழிவுத் தொட்டியில் வீசியிருப்பது தெரியவந்தது.
தடயங்களை அழிக்க முயன்றாதாக கூறி சுவர்ணலதாவைவும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், துணைவேந்தர் கணபதிக்கு பேராசிரியர் தர்மராஜ் ஏஜெண்டாகச் செயல்பட்ட வந்த விசியம் போலீசாருக்கு தெரிய வர அவரையும் கைது செய்தனர்.
இதையடுத்து கோவையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவாளிகளை ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை வருகிற 16-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.