இன்றைய வானிலை முன்னறிவிப்பு: 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!

Last Updated : Sep 6, 2020, 01:17 PM IST
இன்றைய வானிலை முன்னறிவிப்பு: 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..! title=

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக மஞ்சளாறில் 11 செ.மீ, பெரிய குளத்தில் 10 செ.மீ, தல்லாகுளத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ALSO READ | உஷார்... உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள இந்த செயலிகளை உடனடியாக நீக்குங்கள்!!

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக மஞ்சளாறில் 11 செ.மீ., பெரியகுளத்தில் 10 செ.மீ., தல்லாகுளத்தில் 9 செ.மீ., மழை பதிவானது.

மேலும், அடுத்த 2 நாட்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாமக்கல், சேலம், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News