மருத்துவ சுற்றுலாவில் நம்பர் 1 இடத்தை நெருங்குகிறது சென்னை-ககன்தீப் சிங் பேடி பேச்சு

Gagandeep Singh Bedi: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவ சுற்றுலா தளத்தில் சென்னை முதலிடத்தை நெருங்குவதாக கூறியுள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Feb 10, 2024, 06:32 PM IST
  • ரேலா மருத்துவமனையில் நடைப்பெற்ற நிகழ்வு.
  • ககன்தீப் சிங் பேடி கலந்து கொண்டார்.
  • மருத்துவ சுற்றுலாவில் சென்னை நம்பர் 1 இடத்தை நோக்கி நகர்வதாக பேட்டி
மருத்துவ சுற்றுலாவில் நம்பர் 1 இடத்தை நெருங்குகிறது சென்னை-ககன்தீப் சிங் பேடி பேச்சு title=

Gagandeep Singh Bedi Talks About Medical Tourism In Chennai: உலக அளவில் மருத்துவ சுற்றுலா தளத்தில் முதல் இடத்தை நோக்கி சென்னை... திறன் மிக்க மருத்துவர்களால் விரைவில் சாத்தியமாகும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பேச்சு.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடியாக திகழும் சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையுடன் வங்காளதேசம், மலேசிய நாடுகளை சேர்ந்த தொண்டு நிறுவன மருத்துவமனைகளுடன்  கல்லீரல்  மாற்று அறுவை சிகிச்சை பயிற்சிக்கான ஒப்பந்தம் அந்த மருத்துவமனையில் நடைபெற்றது,

இதில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி முன்னிலையில் உலக புகழ்பெற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ ரேலா, பங்களாதேஷ், மலேசிய நாட்டு மருத்துவர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டனர்,

இதன்படி பங்களாதேஷ்,  மலேசியா நாட்டு மருத்துவ குழுவினர் ரேலா மருத்துவமனையில் பயிற்சி பெருவார்கள், அதனை தொடர்ந்து அந்த நாடுகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் போது ரேலா மருத்துவர்கள் உடன் இருக்கும்போது நடைபெறும் அவர்கள் உரிய திறன் பெருவரை பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்தனர்,

மேலும் படிக்க | சென்னையில் இருந்து சுற்றுலா சென்ற 8 பேர் பேருந்து விபத்தில் உயிரிழப்பு

அப்போது பேசிய  ககன்தீப் சிங் பேடி:-

உலக அளவில் அதிக கல்லீரல் மாற்று சிகிச்சை சைனா, அமெரிக்கா என மூன்றாம் இடத்தில் இந்தியாக் திகழ்கிறது,

குறிப்பாக தமிழகத்தில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் 2012ம் ஆண்டு முதல் தற்போது வரை 1667 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன, 2019 முதல் தற்போது வரை ரேலா மருத்துவமனையில் 190 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது, மிகவும் சிக்கலான அதிக செலவுடைய இந்த சிகிசை தமிழகத்தில் எளியோர்களுக்கு அரசுடன் இதுபோல் தனியார் மருத்துவ நிர்வாகம் ஒப்பந்ததால் நடைபெறுகிறது,

உலக அளவில் இதுபோல் திறன் மிக்க மருற்றுவர்களால் சென்னை மருத்துவ சுற்றுலா தளத்தில் முதல் இடமஅடைய வேண்டும் அதுவும் சாத்தியமாகும் என்றார்.

மேலும் படிக்க | தேர்தல் முடிந்ததும் ஓபிஎஸ் பாஜகவில் இணைவார்... ஜெயக்குமார் தாக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News