தீபாவளி முன்னிட்டு சென்னை மெட்ரோ சேவை நேரம் நீட்டிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் நவம்பர் 2 மற்றும் 3-ஆகிய தேதிகளில் மெட்ரோ சேவை நேரம் நீட்டக்கப்படுவதாக சென்னை மெட்ரோ தெரிவித்துள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 31, 2018, 02:00 PM IST
தீபாவளி முன்னிட்டு சென்னை மெட்ரோ சேவை நேரம் நீட்டிப்பு! title=

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் நவம்பர் 2 மற்றும் 3-ஆகிய தேதிகளில் மெட்ரோ சேவை நேரம் நீட்டக்கப்படுவதாக சென்னை மெட்ரோ தெரிவித்துள்ளது!

அடுத்தமாதம் 6-ஆம் நாள் தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் நவம்பர் 3-ஆம் நாள் துவங்கி நவம்பர் 6-ஆம் நாள் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி விடுமுறையினை முன்னிட்டு மக்கள் நவம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து தங்கள் ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அவர்களின் வசதிக்காக  ஏராளமான சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தீபாவளியை முன்னிட்டு அதிக அளவிலான பயணிகள் வெளியூர் செல்ல கோயம்பேடு, எழும்பூர், சென்ட்ரல் ஆகிய பகுதிகளுக்கு படையெடுப்பர் என்பதால் அவர்களின் தேவைக்காக நவம்பர் 2 மற்றும் 3-ஆகிய தேதிகளில் மெட்ரோ சேவை இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படும் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது. வழக்கமாக சென்னையில் இரவு 10 மணி வரை மட்டுமே மெட்ரோ இயக்கப்படும்.

வழக்கமாக பண்டிகை காலங்களில் கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்குச் செல்லும் பாதைகள் மிகுந்த நெரிசலாக இருக்கும். இந்த நிலையில் மெட்ரோ ரயில் சேவை உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News